மேலும் அறிய
Advertisement
Manipur violence: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மணிப்பூரில் நடந்த சம்பவம், வருத்தத்தை அளிக்கிறது இந்தியாவில், இதைப் போன்ற ஒரு சம்பவங்கள் நடக்கிறது என்பது உண்மையிலேயே எங்களுக்கு மன வேதனை மட்டுமல்ல தலைகுனிவாகவும் இருக்கிறது.
மணிப்பூரில் நடைபெறுகிற சம்பவம் மிகவும் கண்டிக்கக் கூடியது, வன்மையாக கண்டிக்கிறோம், பிரதமர் உடனடியாக அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை விமானத்தில் செஞ்சி மஸ்தான் பேட்டியளித்தார்.
ஹஜ் பயணம்
செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: இஸ்லாமியர்களுடைய கடமையான ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சென்ற ஆண்டு கேரளாவின் கொச்சியிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 1700 பேர் புனித பயணம் மேற்கொண்டார்கள். முதலமைச்சர் சார்பாக நான் கேரளா கொச்சின் சென்று அவர்களை வழி அனுப்பினேன். இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசாங்கத்திற்கு கடிதம் கொடுத்து அழுத்தம் கொடுத்து சென்னையில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய காரணமாக, இந்த ஆண்டு நாலாயிரத்துக்கும் , மேற்பட்டவர்கள் அதை தொடர்ந்து ஹச் பயணத்தை முடித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை முதலமைச்சர் சார்பாக வரவேற்று வருகிறோம. இன்று 245 பேர் விமான மூலம் சென்னை வந்தனர். குறிப்பாக 208 பெண்கள், 46 ஆண்கள் என தமிழகத்தை சார்ந்த ஹெச் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பி உள்ளனர். ஹஜ் பயணம் செல்லும்போதும், வரும்பொழுதும் அரசு சார்ந்த மரியாதைகள் உபசரிப்புகள் நல்ல முறையில் செய்து வருகின்றோம். ஹஜ் பயணம் முடித்து விட்டு சென்னை வருபவர்கள் தங்களது வாழ்த்துகளை முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவிக்கின்றனர். ஹஜ் பயணத்தில் போது முதலமைச்சருக்காக பிரார்த்தனை செய்து இருக்கின்றோம் அவர் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும். அவரது ஆட்சி மேலும் தொடர வேண்டும், என்பதுக்காக பிரார்த்தனை செய்து இருக்கின்றோம் என பயணிகள் கூறினர்.
மணிப்பூரில் சம்பவம்
மணிப்பூரில் நடந்த சம்பவம், வருத்தத்தை அளிக்கிறது இந்தியாவில், இதைப் போன்ற ஒரு சம்பவங்கள் நடக்கிறது என்பது உண்மையிலேயே எங்களுக்கு மன வேதனை மட்டுமல்ல தலைகுனிவாகவும் இருக்கிறது. இப்பேற்பட்ட கொடுமைகள் எங்கும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வாழும் காலமெல்லாம் இந்த மக்களுக்காக அங்கே வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதற்காக தான் இங்கே வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் ஒற்றுமையில் வேற்றுமை காணுகிற ஒரு நிகழ்வு இந்தியாவில் மணிப்பூரில் நடைபெறுகிறது மிகவும் கண்டிக்கக் கூடியது வன்மையாக கண்டிக்கிறோம், பிரதமர் உடனடியாக, அதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய எண்ணமும் விருப்பமும், வருகின்ற 23 ஆம் தேதி நாடாளுமன்ற குழு தலைவர் எம்.பி கனிமொழி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக அறிவித்து இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 24 - ஆம் தேதி மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் , விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் திண்டிவனத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion