மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Chandramuki2: “நடிக்கவே தகுதி இல்லைனு சொன்னாங்க; இவருக்குதான் நன்றி சொல்லனும்” - குமுறிய வடிவேலு..!

ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

வைகைப்புயல்’ வடிவேல் பேசுகையில், '' ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை. இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற..முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன்.


Chandramuki2:  “நடிக்கவே தகுதி இல்லைனு சொன்னாங்க; இவருக்குதான் நன்றி சொல்லனும்”  - குமுறிய வடிவேலு..!

நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு. மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு. என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன்லி லைனை மட்டும்தான் சொல்வார். இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன். அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையை கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம் தான் சந்திரமுகி 2.


Chandramuki2:  “நடிக்கவே தகுதி இல்லைனு சொன்னாங்க; இவருக்குதான் நன்றி சொல்லனும்”  - குமுறிய வடிவேலு..!

சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் '' என பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
P Chidambaram:
"காங்கிரசுக்கே தார்மீக வெற்றி! நாங்கள் கொண்டாடுவதில் பாஜகவுக்கு ஏன் பொறாமை?" ப.சிதம்பரம்
"நீதி வேண்டும்! புதியதாக யாரும் உருவாக அண்ணாமலை விரும்பவில்லை" பா.ஜ.க. நிர்வாகி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PM Modi : ஜனாதிபதியை சந்தித்த மோடி..ஜூன் 9 பதவியேற்பு!MK Stalin MASTER PLAN : திமுக எம்.பிக்கள் கூட்டம்..முதல்வரின் அதிரடி முடிவு!ஆட்டம் ஆரம்பம்Annamalai become MP? : மத்திய அமைச்சர் அ.மலை?பறிபோகிறதா மாநில பதவி?அதிரடி காட்டும் மோடிMamata Banerjee vs Modi : மம்தாவிடம் SURRENDER ஆன 3 பாஜக எம்பி-க்கள்? கலக்கத்தில் மோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
P Chidambaram:
"காங்கிரசுக்கே தார்மீக வெற்றி! நாங்கள் கொண்டாடுவதில் பாஜகவுக்கு ஏன் பொறாமை?" ப.சிதம்பரம்
"நீதி வேண்டும்! புதியதாக யாரும் உருவாக அண்ணாமலை விரும்பவில்லை" பா.ஜ.க. நிர்வாகி குற்றச்சாட்டு
Yogi Babu : ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்... தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு...
ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்....தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு
T20 World Cup: மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
Anjaamai Review: நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
Embed widget