மேலும் அறிய

Andhagan Trailer: ரசிகர்களே! ஒருவழியா ரிலீசானது அந்தகன் ட்ரெயிலர்! கம்பேக் தருவாரா பிரசாந்த்?

பிரசாந்த் நடிப்பில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த அந்தகன் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

1990 – 2000 காலகட்டத்தில் விஜய், அஜித்தை காட்டிலும் மிகவும் புகழ்பெற்ற நடிகராக உலா வந்தவர் நடிகர் பிரசாந்த். இவரது நடிப்பில் வெளியான வைகாசி பொறந்தாச்சு, ஆணழகன், கல்லூரி வாசல், கிருஷ்ணா, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், பூமகள் ஊர்வலம், பார்த்தேன் ரசித்தேன், ஸ்டார், பிரியாத வரம் வேண்டும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அந்தகன் (Andhagan):

வின்னர் படத்திற்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியான படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. அவர் நடிப்பில் வெளியான லண்டன், தகப்பன்சாமி, அடைக்கலம், பொன்னர் சங்கர், மம்பட்டியான், சாகசம், புலன் விசாரணை 2, ஜானி படங்கள் தொடர் தோல்வியை தழுவின.

இதையடுத்து, இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்தாதுன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தின் தமிழ் உரிமத்தை பிரசாந்த் கைப்பற்றினார். இதையடுத்து, இந்த படத்தில் தமிழில் பிரசாந்தே கதாநாயகனாக நடிக்க அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். நீண்ட நாள் படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆகஸ்ட் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ரிலீசானது ட்ரெயிலர்:

இந்த நிலையில், அந்தாதுன் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியானது. பிரசாந்துடன் சிம்ரன், நவரச நாயகன் கார்த்திக், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகிபாபு என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். பார்வையற்ற இசைக்கலைஞராக இந்த படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். அவருக்கும், அவரைச் சுற்றி நடக்கும் கொலையுமே கதைக்களம் ஆகும்.

இந்தியில் ஆயுஷ்மான் குரோனா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடிகர் விஜய்க்கு அடுத்த நாயகனாக பிரசாந்த் நடித்துள்ள நிலையில், அவர் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. 

தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு இந்த படத்தை விநியோகிக்கிறார்.

படத்தின் ட்ரெயிலர் பெரியளவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் அமைதியாகவே நகர்கிறது. இசைக்கலைஞராக வரும் பிரசாந்த், அவரை சந்திக்கும் பிரியா பவானி சங்கர், பிரசாந்துடன் இருக்கும் சிம்ரன், யோகிபாபுவின் நகைச்சுவை என ட்ரெயிலர் உள்ளது. அந்தாதுன் படத்தை பெரியளவில் நம்பியுள்ள பிரசாந்திற்கு இந்த படம் கைகொடுக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: Kalki 2898AD : ரூ.1000 கோடி வசூலித்த 2-வது பிரபாஸ் படம்! கல்கி 2898 AD மாபெரும் வசூல் சாதனை

மேலும் படிக்க: Watch Video : அனந்த் அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget