Watch Video : அனந்த் அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ
Watch Video : இன்று நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் முதலே திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அம்பானி இல்ல திருமண விழா சர்வதேச அளவில் கவனம் பெரும் அளவில் படு விமரிசையாக பிரமாண்டத்துக்கு பஞ்சமே இல்லாமல் கொண்டாடப்பட்டு வருகிறது.
சங்கீத், மெஹந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற இன்று ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூலை 15ம் தேதி வரை மூன்று நாள் கொண்டாட்டமாக நடைபெற உள்ளததால் மும்பை மாநகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
திரைத்துறை, தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பல துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் வருகை தந்து வருகிறார்கள்.
அந்த வகையில் கோலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபலங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன் மற்றும் பேரக்குழந்தையுடன் கலந்து கொண்டார். பாரம்பரியமான வெள்ளை நிற குர்தா மற்றும் வேஷ்டியில் மிகவும் கம்பீரமாக கலந்து கொண்டார். சிவப்பு கம்பளத்தில் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram
அந்த வகையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் ஊக்குவிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைலான டான்ஸ் மூவ்மென்ட்ஸ் போட்டு அசத்தியுள்ளார். விருந்தாளிகள் அனைவரின் பார்வையும் ரஜினிகாந்த் மீது தான் இருந்தது. அவரின் நடனத்தை அனைவரும் கொண்டாடினார்கள். அனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த் டான்ஸ் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. லைக்ஸ்களை அள்ளி தெளித்து வருகிறார்கள் சூப்பர் ஸ்டார் டை ஹார்ட் ஃபேன்ஸ்.