மேலும் அறிய

Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?

Maruti Baleno Facelift: மாருதி சுசூகி நிறுவனத்தின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான பலேனோவின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Maruti Baleno Facelift: மாருதி சுசூகி நிறுவனத்தின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான பலேனோவின் ஃபேஸ்லிஃப்ட்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

மாருதி சுசூகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்:

மாருதி சுசூகி நிறுவனம் ப்ரேஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலை சந்தைப்படுத்தியதை தொடர்ந்து, பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் செப்டம்பர் 5ம் தேதி அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள தலைமுறையானது கடைசியாக கடந்த   2022ம் ஆண்டு தனது கடைசி அப்டேட்டை பெற்றது. அதன் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக, ஒருமுறை சில அப்க்ரேட்களை பெற உள்ளது. இதன் காரானது கடந்த சில மாதங்களில் பல முறை சாலை பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்களானது, மேம்படுத்தப்பட்ட மாடலானது டிசைன் மற்றும் உட்புற மாற்றங்களோடு, மிகப்பெரிய அளவிலான புதிய அம்சங்களும் சேர்க்கப்படுவதை உறுதி செய்துள்ளன. 

பலேனோ ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற அப்டேட்கள்:

புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட், திருத்தப்பட்ட முகப்புடன் அமைப்பை கொண்டுள்ளது. இதில், ஹெட்லைட்டுகளுக்கு இடையில் கனெக்டராக செயல்படும் ஒரு மெல்லிய க்ரோம் ஸ்ட்ரிப்புடன், சற்றே மாற்றியமைக்கப்பட்ட நேர்த்தியான க்ரில் இடம்பெற்றுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட 16-இன்ச் அலாய் வீல்களைத் தவிர, பக்கவாட்டுத் தோற்றம் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றன. பின்பக்கத்தில், சற்றே மாற்றியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் டெயில்லைட்டுகளுக்கான புதிய உள்ளமைப்புகள் வடிவில் இந்த ஹேட்ச்பேக் குறைந்தபட்ச மாற்றங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலேனோ ஃபேஸ்லிஃப்ட் - அம்சங்கள், வசதிகள்

கேபினுக்குள், இந்த ஹேட்ச்பேக் பெரும்பாலும் மாற்றமின்றி இருக்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள டேஷ்போர்ட் அமைப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவுள்ள பெரும்பாலான மாற்றங்கள் அதன் இருக்கை உறைகள் மற்றும் கதவு ட்ரிம்களில் மட்டுமே இருக்கலாம். பலேனோ ஃபேஸ்லிஃப்ட் 9-இன்ச் யூனிட்டிற்கு மாற்றாக, பெரிய 10.1-இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டைப் பெறக்கூடும். மற்ற அம்சங்களில் ஆட்டோமேட்டிக் ஏசி, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை ஆகியவை அடங்கும்.

இதையும் படியுங்கள்: Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்

பலேனோ ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்

புதிய மாருதி பலேனோ, 88bhp மற்றும் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் அதே 1.2-லிட்டர், நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்பட வாய்ப்புள்ளது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஒரு ஆட்டோமேடட் ஆப்ஷன்கள் கிடைக்கும். இது மேனுவல் கியர்பாக்ஸுடன் கூடிய CNG வேரியண்ட்டையும் பெறும். இந்த ஹேட்ச்பேக், ஏற்கனவே ஃப்ராங்க்0ஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரேஸ்ஸாவில் உள்ள 1.0-லிட்டர், 3-சிலிண்டர், பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த இன்ஜின் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய பலேனோவின் சிஎன்ஜி எடிஷன் லிட்டருக்கு சுமார் 30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பலேனோ ஃபேஸ்லிஃப்ட் - விலை விவரங்கள்

பலேனோவின் தற்போதைய எடிஷனின் விலை ரூ.5.99 லட்சத்தில் தொடங்கி ரூ.9.17 லட்சம் வரை நீள்கிறது. வழங்கப்பட உள்ள புதிய வசதிகள், அம்சங்கள், டர்போ இன்ஜின் ஆப்ஷன் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் பலேனோவின் விலை வரம்பானது ரூ.6.70 லட்சம் முதல் ரூ.9.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீளக்கூடும். உள்ளூர் சந்தையில் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கானது டொயோட்டா க்ளான்ஸா, டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் ஹுண்டாஇ ஐ20 ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.80,000 பட்ஜெட்... 75 கி.மீ மைலேஜ்! பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கும் 'டாப் 3' பைக்குகள்!
ரூ.80,000 பட்ஜெட்... 75 கி.மீ மைலேஜ்! பெட்ரோல் செலவை பாதியாக குறைக்கும் 'டாப் 3' பைக்குகள்!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget