மேலும் அறிய

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

ஹைதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூர் ஹோட்டலில் விஸ்வநாத அண்ட் சன்ஸ் படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. படம் ரிலீசாகி ஒரே நாளில் ஏன் இந்த ஏற்பாடு என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். 

நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒரே நாளில் நடந்துள்ள சம்பவம் திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்

வாத்தி, லக்கி பாஸ்கர் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்த படம் தான் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”. இந்த படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது. முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் இப்படத்தை அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். 

கலவையான விமர்சனம்

இதனிடையே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதி மற்றும் கிளைமேக்ஸ் காட்சி சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் பாதியில் தேவையில்லாமல் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக படம் பார்த்த நபர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அதேசமயம் இந்த விடுமுறைக்கு குடும்பத்துடன்  காண சிறந்த திரைப்படம் எனவும் தெரிவித்தனர். இப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.74.47 கோடி உலகளவில் வசூல் பெற்றுள்ளதாக sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. 

ஒரே நாளில் நடந்த வெற்றிக் கொண்டாட்டம்

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூர் ஹோட்டலில் இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. விஸ்வநாத அண்ட் சன்ஸ் படம் ரிலீசாகி ஒரே நாளில் ஏன் அவசரமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, நீங்கள் காட்டும் அன்பிற்கு என் நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. வெங்கி அட்லூரி, நாகவம்சி இருவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள், நான் தமிழ் பேசுகிறேன், மமிதா மலையாளம் பேசிவார், ரவீனா மராத்தி பேசுபவர். இப்படி வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து வெவ்வேறு மொழி பேசினாலும் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்தப் படத்தின் மீது அன்பை பொழிந்து ரசிகர்கள் மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் இதற்கு அற்புதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.குடும்பப் படங்கள் நம் அனைவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சில படங்களின் வெற்றியை அவற்றின் வசூலைக் கொண்டு அளவிட முடியாது. இந்தப் படத்தின் உண்மையான வெற்றி பார்வையாளர்களின் அனுபவத்தில் தான் உள்ளது என தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget