![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rhea Chakraborty:’ சுஷாந்தை ரொம்ப மிஸ் பண்றேன்’ - மனம் திறந்த காதலி ரியா சக்ரபோர்த்தி
Rhea Chakraborty: வாழ்வில் முன்னேறிச் செல்வது நம்மை மனிதனாக்கும் என்று உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளா ரியா சக்ரபோர்த்தி
![Rhea Chakraborty:’ சுஷாந்தை ரொம்ப மிஸ் பண்றேன்’ - மனம் திறந்த காதலி ரியா சக்ரபோர்த்தி actor sushant singh girl friend actress and VJ Rhea Chakraborty Share her tough time in case Rhea Chakraborty:’ சுஷாந்தை ரொம்ப மிஸ் பண்றேன்’ - மனம் திறந்த காதலி ரியா சக்ரபோர்த்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/88ccf6c51d4ee2b6029c18fc708e674b1696773463316333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல பாலிவுட் நடிகர் மறைந்த சுஷாந்த் சிங் கிரிக்கெட் வீரர் மகேர்ந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறுத் திரைப்படமான தோனி அன்டோல்ட் ஸ்டோரி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். கடந்த 2022-ம் ஆண்டு அவர் தங்கியிருந்த அபார்ட்மன்ட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பாலிவுட் உலகில் பேசுபொருளானது. இந்த விவகாரத்தில் முக்கிய பாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன.
சுஷாந்த் காதலி மீது குற்றச்சாட்டு
இந்த விவரகாரத்தில் சுஷாந்த் காதலியான ரியா சக்ரபோர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் ரியாவும், அவரது அண்ணன் சோவிக் சக்ரபோர்த்தியும் கைது செய்யப்பட்டனர். ரியா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்திருக்கும் ரியா இந்தியா டுடே கருத்தரங்கு ஒன்றில் நேர்காணலில் சுஷாந்த் சிங்கை இழந்தது, அவரது மீதான குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட மன உளைச்சல், வலி குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
View this post on Instagram
எனக்குப் பிடித்த சூனியக்காரி
“ பலரும் என்னை சூனியக்காரி என்று அழைத்தனர். அப்படி சொல்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தக் காலத்தில் சூனியக்காரி என்பவர்கள் ஆணாதிக்கச் சமூகத்திற்கு எதிராக இருந்திருக்கிறார்கள். சூனியக்காரிகள் ஆணாதிக்கவாதிகளின் கருத்திற்கு எதிராக இருந்திருக்கிறார்கள். அதனால் சூனியக்காரி என்று என்னை அழைப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது. நான் என் வாழ்க்கை துணையை இழந்துள்ளேன்.
அவரை ரொம்பவே மிஸ் செய்கிறேன். அவர் இலலாத நாள்களை கடப்பது ரொம்பவே கடினமாக உள்ளது. சுஷாந்தின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. சுஷாந்த் மரணம், அதனால் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், எங்கள் குடும்பம் சந்தித்து - எல்லாவற்றின் மூலம் நான் அடைந்த வலி, துன்பம் வார்த்தைகளில் சொல்லிட முடியாதது. எங்கு சென்றாலும் என்னை பற்றிய எதிர்மறையான விம்ர்சனங்களை எதிர்கொண்டேன். எனக்கு வருத்தப்படுவதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
இவ்வளவு நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொள்ள என் குடும்பத்தில் இருந்தே கற்றுகொண்டேன் என்று குறிப்பிட்ட ரியா, ” நான் இந்த இக்கட்டான காலத்தை எதிர்கொள்ள என் குடும்பமே உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு வலிமையையும் பொறுமையையும் அளித்தனர். அப்பா இராணுவத்தில் இருந்தவர். அவர் அடிக்கடி சொல்வார். தாக்குதல் காலங்களில் எங்களை நோக்கி தோட்டா வரும்போது யாரும் அதிலிருந்து தப்பிக்க முயல மாட்டோம். அதை எதிர்கொள்வோம். உயிரேபோனாலும் இறுதிவரை போராடினோம் என்று திருப்தி இருக்கும்’ என்று சொல்வார். அதுதான் நெருக்கடியான் காலத்திலும் என்னை தயார்படுத்தியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பிரபலங்கள் ஆதரவு
நடிகை சமந்தா, ஹன்சிகா மோத்வானி, மிர்னால் தாகூர், ஹூமா குரேஷி உள்ளிட்டவர்கள் ரியாவை ‘ஹீரோ’ என குறிப்பிட்டு அவரது வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க..Leo Third Single: ‘லியோ’ படத்தின் ரொமான்டிக் பாடல்... நாளை வெளியாகும் மூன்றாவது சிங்கிள்?
மேலும் வாசிக்க..Leo Vijay: என்னது.. விஜய்க்கு ஓப்பனிங் சாங் இல்லையா.. பில்ட்-அப் இல்ல.. லியோ முழுக்க முழுக்க லோகேஷ் படம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)