ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
கனமழை காரணமாக மரக்காணத்தில் 3500 ஏக்கர் உப்பளம் நீரில் முழ்கியது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் தொடா் மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்காணத்தில் கடற்கரையோர கழிமுகப் பகுதிகளில் உப்பளங்கள் அமைத்து உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 3,500 ஏக்கா் பரப்பில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உப்பளத் தொழிலாளா்கள் பாத்தியிட்டு, கடல் நீரை தேக்கி உப்பு உற்பத்தி செய்து வருகின்றனா்.
இந்தத் தொழிலில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் மரக்காணம் உள்ளது.
இங்கு ஆண்டுக்கு 25 லட்சம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்பொழுது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் உப்பு உற்பத்திக்கான பாத்திகள் மறைந்து, உப்பளங்களில் நிகழாண்டில் உப்பு உற்பத்திக்கு மழை முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
Fengal Cyclone LIVE Updates | ஃபெங்கல் புயல் LIVE
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது இன்று மாலை புயலாக உருமாற உள்ளது. இதற்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் சென்னை – பரங்கிப்பேட்டை அருகே கரையைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபெங்கல் புயல் எச்சரிக்கை:
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “ தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையிலிருந்து, சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தற்போது, சுமார் 10 கி.மீ., வேகத்தில் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.அதிகனமழைக்கான எச்சரிக்கை:
27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
28-11-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
29-11-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.