Actor surya: 'உக்ரைன் மக்கள்.. 2.5 வருஷத்துக்கு பின் தியேட்டர்' - ட்ரைலர் வெளியீட்டு விழாவில் உருகிய சூர்யா!
எதற்கும் துணிந்தவன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் உக்ரைன் விவகாரம் குறித்தும், படம் குறித்தும் சூர்யா பேசினார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக, பிரியங்கா மோகனன் நடித்துள்ள நிலையில், வில்லனாக நடிகர் வினய் நடித்திருக்கிறார். 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இதற்கான விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது. விழாவில் உக்ரைன் விவகாரம் குறித்தும், படம் குறித்தும் சூர்யா பேசினார்.
அதில், ''நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நேரம் உக்ரைனில் அறியாத, எதுவும் தெரியாத மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் அங்கி சிக்கியுள்ளனர். எனக்கு கூட்டு பிரார்த்தனையில் நம்பிக்கையுள்ளது. அங்கிருப்பவர்கள் பாதுகாப்பாக வர வேண்டும். அரசு எல்லாமே செய்கிறது. ஆனால் சில வீடியோக்களை பார்த்தால் மனசு படபடக்குது. உயிர்ச்சேதம் ஏதுமின்றி அனைவரும் திரும்பி வர வேண்டும். அனைவரும் வேண்டிக்கொள்வோம். இரண்டரை வருஷம் கழித்து திரையரங்கில் வரப்போகுது.
தியேட்டரில்தான் அனைத்தையுமே கற்றுக்கொண்டேன். நம்மை நாமே செதுக்கிக் கொள்ள வேண்டுமென்பதை தியேட்டர் மூலமே கற்றுக்கொண்டேன். மறுபடி தியேட்டரில் என் படத்தை குடும்பத்துடன் பார்க்கப் போகிறீர்கள் என்பதே பெருமகிழ்ச்சி. அதற்கு சரியான படம். லாக்டவுனில் இந்த படத்தை பண்ணோம். அனைத்து யூனிட் ஆட்களுக்கும் நன்றி. சத்யராஜ் எனக்கு மாமா. பிறந்தது முதல் எங்களுடன் இருக்கிறார். அவருடைய அன்பே ஆசீர்வாதம்'' என்றார்