Suriya: கூல் லுக்... பொறுப்பான தந்தை... மும்பையில் ரோலக்ஸ்... வைரலாகும் சூர்யாவின் வீடியோ!
பாப்பரசிக்களால் படம் பிடிக்கப்பட்ட சூர்யாவின் இந்த ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் சூர்யா, வெள்ளை நிற ஷர்ட், டெனிம் ஷர்ஸ் அணிந்தபடி மும்பையில் வலம் வரும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
மும்பையில் சூர்யா:
மும்பை, பாந்த்ரா பகுதியில் காஃபி ஷாப் ஒன்றில் பாப்பரசிக்களால் படம் பிடிக்கப்பட்ட சூர்யாவின் இந்த ஃபோட்டோக்கள் இணைய்த்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் சூர்யா கஃபேவை விட்டு வெளிவரும் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டுள்ள நிலையில், ”என் குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்கள், நீங்கள் அவர்களை படம் பிடிப்பதை விரும்பவில்லை” என சூர்யா கோருவதும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
.@Suriya_offl 's recent offline looks are so freaking and stylish 🔥 pic.twitter.com/DiC3AlEk1W
— Media Forte (@TheMediaForte) March 5, 2023
முன்னதாக இதேபோல் சூர்யா மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை மும்பையில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
மேலும் சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சச்சின் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததுடன், இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது, உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது, மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சச்சின் - சூர்யா இருவரது ரசிகர்களையும் மகிழ்வித்து இணையத்தில் ட்ரெண்டானது.
நடிகர் சூர்யா முன்னதாக அடிக்கடி மும்பை சென்று வந்த நிலையில் தற்போது தன் மனைவி நடிகை ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாகத் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
சூர்யா 42:
சிறுத்தை சிவா பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் தன் 42ஆவது படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். திஷா பத்தானி முதன்முறையாக பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து சூர்யாவுடன் இப்படத்தில் கைக்கோர்க்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் நடித்திராத வகையில், சூர்யா இந்தப் படத்தில் 13 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி ஏற்கெனவே ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
1000 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் வரலாற்றுக் கதையாக சூர்யா 42 உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக 10 மொழிகளில் 3டியில் வெளியாக உள்ளது.
ஏப்ரல் மாதமே படப்பிடிப்பு முடிவடையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சூர்யா 42 படத்தின் ஹிந்தி உரிமையை தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா கைப்பற்றிவிட்டதாகவும், 100 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: LEO Update: லியோ ஷுட்டிங்கில் 'பிக் டாடி’.. விஷூவல் ட்ரீட் இருக்கு...! விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒளிப்பதிவாளர்..!