LEO Update: லியோ ஷுட்டிங்கில் 'பிக் டாடி’.. விஷூவல் ட்ரீட் இருக்கு...! விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒளிப்பதிவாளர்..!
ரெட் பிராண்டைச் சேர்ந்த வி ராப்டார் எனும் மாடலைச் சேர்ந்த இந்த அதிநவீன கேமரா மூலம் 8கே தரத்தில் துல்லியமாக வீடியோக்களை பதிவு செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 68ஆவது படமான லியோ படத்தின் ஷூட்டிங் சென்ற ஜனவரி மாதம் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
லியோ படப்பிடிப்பு:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் இணையும் இந்தப் படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் தாஸ், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இணைந்துள்ளது.
அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
அதிநவீன கேமரா:
தற்போது லியோ படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவினரும் காஷ்மீரை முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கில் உயர்தர ரெட் (RED) கேமராக்கள் பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரெட் பிராண்டைச் சேர்ந்த வி ராப்டார் எனும் மாடலைச் சேர்ந்த இந்த அதிநவீன கேமரா மூலம் 8கே தரத்தில் துல்லியமாக வீடியோக்களை பதிவு செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராப்டர் வகை கேமராக்கள் மூன்றும் கொமோடோ எனும் வகைப்படும் காமராவையும் தான் ஷூட்டிங் தளத்தில் பயன்படுத்தும் இந்த வீடியோவை மனோஜ் பரமஹம்சா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிக் டாடி எனக்குறிப்பிட்டும், லியோவில் போர் செய்வதற்கு தன் காமராக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ட்ரீட் இருக்கு:
40 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள இந்த கேமரா படப்பிடிப்பு தளத்தில் உபயோகப்படுத்தப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், ”லியோவில் விஷூவல் ட்ரீட் காத்திருக்கு” என இணையத்தில் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இதேபோல் சூர்யாவின் அஞ்சான் படத்தில் ரெட் டிராகன் டிஜிட்டல் காமரா உபயோகப்படுத்தப்பட்டது கோலிவுட்டில் பேசுபொருளானது.
இதேபோல் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படமான விக்ரம் படத்தில் இண்டர்வல் பிளாக் ஆக்ஷன் காட்சிகளுக்காக ரோபோட்டிக் ஆர்ம் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், இது தொடர்பான மேக்கிங் காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளின