Suriya : பாபி தியோல் கூட சண்ட போட முடியாது.... கங்குவா படத்தின் சண்டைக் காட்சிகள் பற்றி சூர்யா
Suriya On Bobby Deol : கங்குவா படத்தில் பாபி தியோல் உடன் சண்டைக்காட்சிகளில் நடித்த அனுபவத்தை நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்டுள்ளார்
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக தமிழுக்கு அறிமுகமாகிறார். கடந்த ஆண்டு பாபி தியோல் நடித்த அனிமல் படம் அவருக்கு மிகப்பெரிய கவனத்தை இந்தியா முழுவதும் பெற்றுத் தந்திருக்கிறது. கங்குவா படத்தின் ப்ரோமோஷனின் போது நடிகர் பாபி தியோல் உடன் சண்டைக்காட்சிகள் நடித்த அனுபவத்தை நடிகர் சூர்யா பகிர்ந்துகொண்டுள்ளார்
பாபி தியோல் பற்றி சூர்யா
" அனிமல் படம் வெளியாவதற்கு முன்பே பாபி தியோல் கங்குவா படத்திற்குள் வந்துவிட்டார். அவரை என்னுடைய சகோதரனைப் போல் நான் உணர்கிறேன். கங்குவா படத்திற்காக அவர் தனது சொந்த குடும்ப நிகழ்ச்சிகளை கூட தியாகம் செய்தார். இந்த படப்பிடிப்பு நடந்து முடிந்த காலத்தில் அவரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அவர் எங்களிடம் பகிர்ந்துகொண்டார். அவருடன் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது நான் என்னுடைய மொத்த நம்பிக்கையையும் என் கண்களுக்கு கொண்டு வர வேண்டியதாக இருந்தது. நீங்கள் அவர் காலை பார்க்க வேண்டும். மரத்தின் கிளைகள் போல அவரது உடல் இருக்கும். அவருடன் என்னால் சண்டை போட முடியாது. அதனால் நான் ரொம்ப கான்ஃபிடண்டாக நடிக்க வேண்டியதாக இருந்தது." என சூர்யா தெரிவித்தார்.
#Suriya: I gathered all my confidence & courage to stand in front of him due to his physical appearance. As I have to fight opposite to him in #Kanguva#BobbyDeol: Suriya doesn't have to be Taller than what he is, because he stands so Tall
— AmuthaBharathi (@CinemaWithAB) October 23, 2024
Suriya feeling emotional🫶❣️ pic.twitter.com/9Feuq006gg
சூர்யா பேசியதும் பேசிய பாபி தியோல் " சூர்யாவுக்காக தான் இந்த படத்தில் நான் நடிக்க சம்மதித்தேன். அவரை முதல் நாள் சந்தித்து பேசியபோது ஏதோ பல வருட பழக்கமான ஒரு மனிதர் போல் உணர்ந்தேன். நாங்கள் எங்கள் குடும்பங்களைப் பற்றி எங்கள் அனுபவங்களைப் பற்றி நிறைய பேசினோம். சூர்யா தோற்றத்தைப் பற்றி சொன்னார் ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகர் அவர் உருவத்தில் எனக்கு பெரியவனாக இருக்க தேவையில்லை ஆனால் அவர் எல்லாரையும் வித உயர்வானவர். அவரது எல்லா ஸ்டண்ட் காசிகளையும் அவரே செய்வார். அவரது நடிப்பைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன்" என பாபி தியோல் தெரிவித்துள்ளார்