மேலும் அறிய

Suriya : பருத்திவீரன் படத்துக்கு பிறகு இப்போதான்.. மெய்யழகன் கார்த்தி பற்றி சூர்யா சொன்னது என்ன?

பருத்திவீரன் படத்திற்கு பின் மெய்யழகன் படத்தைப் பார்த்து வீட்டிற்கு சென்று கார்த்தியை கட்டி அணைத்துக் கொண்டதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்

மெய்யழகன்

கார்த்தியின் 27 ஆவது படமாக உருவாகி இருக்கும் படம் மெய்யழகன். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி , ராஜ்கிரண் , ஶ்ரீதிவ்யா , தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் காணொளிகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தியை கட்டிப்பிடித்தேன்

மெய்யழகன் படத்தைப் பற்றிய பேசிய நடிகர் சூர்யா இப்படி கூறினார் " மெய்யழகன் படத்தின் கதை என்னுடைய ஞானவேல் வழியாக எனக்கு வந்து சேர்ந்தது. பிரேம்குமார் இயக்கிய 96 படத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. மெய்யழகன் படத்தின் கீழ் தயாரிப்பு சூர்யா ஜோதிகா என்கிற பெயர் போடுவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு பிரேம்குமாருக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.  கார்த்தி தேர்வு செய்து நடிக்கும் படங்களைப் பற்றி ஜோதிகா எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார். மெய்யழகன் மாதிரியான ஒரு படத்தை பண்ணலாம் என்று கார்த்தி சொன்னபோதே அவர் இந்த கதபாத்திரத்தை எப்படி நடிப்பார் என்று என்னால் யூகிக்க முடிந்தது.

திரைக்கதைதை விட தங்களது நடிப்பால் இன்னும் அழகுபடுத்தி இருக்கிறார்கள். கார்த்தி அரவிந்த் சாமியின் ப்ரோமான்ஸைப் பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கிறது. அரவிந்த் சாமி நடித்த ரோஜா படத்தை நான் பார்த்துவிட்டு அவர் போட்டிருந்தது போலவே ஒரு சிவப்பு நிற டீஷர்ட் வாங்கினேன். இன்னும் அந்த டீஷர்ட் என்னிடம் இருக்கிறது.

1992 இல் தொடங்கிய இந்த பயணம் இன்று மெய்யழகன் படம் வரை தொடர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நேற்று இரவு இந்த படத்தைப் பார்த்து தொண்டையில் ஒரு கல்லை வைத்திருப்பதுபோல் உணர்ந்தேன். பருத்திவீரன் படத்திற்கு பிறகு மெய்யழகன் படத்தை பார்த்து கார்த்தியை கட்டிப்பிடித்தேன். இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் வந்து கொண்டாடுவதற்காக மட்டும் பாருங்கள். வசூலைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்." என சூர்யா தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
Embed widget