Actor Sri: இது ஸ்ரீ கிடையாது.. கால் பண்றவங்கள ப்ளாக் பண்றாரு - கல்லூரி நண்பர் வேதனை
Actor Sri: நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து அவரது கல்லூரி நண்பர் வேதனை தெரிவித்துள்ளார்.

கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண் 18/9 படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானாவர். மாநகரம், இறுகப்பற்று ஆகிய படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.
இந்த நிலையில், இவர் சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில், அவரது கல்லூரி நண்பர் ஒருவர் நடிகர் ஸ்ரீ குறித்து பேசினார். தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு அவரது நண்பர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நடிகர் அல்ல இயக்குனர்:
2006ம் ஆண்டு விஸ்காம் சேர்ந்தோம். அவர் 2005ம் ஆண்டு பேட்ஜ். அவர் திறமைசாலி. மிமிக்ரி பண்ணுவார். மைம் பண்ணுவார். கலைநிகழ்ச்சி எல்லாம் அவர்தான் முன்னெடுத்து நடத்துவார். கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியிலும் வெற்றி பெற்றார். அவரை எல்லாருக்கும் பிடிக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகளுக்கு அவரைப் பிடிக்கும்.
அடிப்படையில் ஸ்ரீ ஒரு இயக்குனர். அவர் ஒரு நடிகர் அல்ல. இயக்கம் தான் அவரது இலக்கு. அதற்காகத்தான் அவர் விஸ்காம் பண்ணாரு. என்னுடன் பேசும்போதும் இயக்குனராகவே அவர் பேசினார். நடிப்பு ஒரு தேவைக்காக பண்ணியிருப்பார். புதுப்பேட்டை மாதிரி ஒரு குறும்படம் பண்ணியிருந்தார். அவருக்கு குடும்பத்தில் எந்த மாதிரி சிக்கலும் இருந்த மாதிரி தெரியவில்லை.
நண்பர்கள் இல்லையா?
எப்பவும் அவர் யாருடன் நெருக்கமாக இருக்கிறார்? என்பது தெரியாது. அவருக்கு நண்பர்களே இல்லை என்பது போலவே இருந்தது. தொடர்ந்து நடிக்கச் சென்றதால் அவருக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் தரவில்லை. அப்போது கூட அவரது பெற்றோர்கள் வந்தது போல தெரியவில்லை. அவரே அதைத் தீர்த்துக்கொண்டார் என்றே நினைக்கிறேன்.
நான் கடைசியாக அவரிடம் 2014ம் ஆண்டுதான் பேசுனேன். நானே தயாரிக்கலாம் என்று அவரிடம் பேசினேன். எப்படி இவ்வளவு சீக்கிரம்னு கேட்டேன். அதன்பின்பு நான் படம் தயாரிக்கவில்லை. அப்போ நல்லா இருந்தார். அதனால், நானும் பேசவில்லை.
ப்ளாக் பண்றாரு:
இறுகப்பற்று படம் வந்தபோது நன்றாக இருந்தான் என்றுதான் நினைத்தோம். இது இவன் கிடையாது. இவன் இந்த மாதிரி ஒருத்தனே கிடையாது. இவன் இப்படி இருக்க வேண்டியதே கிடையாது. கால் பண்றவங்களை எல்லாம் ப்ளாக் பண்றாரு. அவரோட சொந்தக்காரர்கிட்ட பேசுனேன். அவர் யாருகிட்டயும் பேச மாட்டேங்குறான் அப்படினு சொன்னாங்க.
இவ்வாறு அவர் பேசினார்.

