மேலும் அறிய

ஹீரோவாக நடித்தாலும் இதை கொடுக்க வேண்டும்.. இதான் என்னுடைய ஆசை - நடிகர் சூரி

நகைச்சுவை என்பது எல்லோரிடமும் இருக்கும். கதாநாயகனாக நடித்தாலும் நகைச்சுவை கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் - நடிகர் சூரி

திருட்டுத்தனமாக வெளியிடப்படும் புது படங்கள் சமூக வலைதளங்களில் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் மீண்டும் தியேட்டரில் வந்து மக்கள் பார்க்கின்றனர். மக்கள் தியேட்டருக்கான வரவேற்பு கொடுத்து தான் வருகின்றனர் என நடிகர் சூரி கூறியுள்ளார்.

ஹீரோவாக நடித்தாலும் இதை கொடுக்க வேண்டும்.. இதான் என்னுடைய ஆசை - நடிகர் சூரி

திண்டுக்கல் தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் சூரி மாமன் படம் குறித்து திண்டுக்கல் மக்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ”மாமன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. திரையரங்குகள் அனைத்திலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். கொஞ்சம் கூட படத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. வருடம், வருடம் குடும்ப சார்ந்த படங்கள் எடுக்க ஆசைப்படுகிறேன். படத்தை வெற்றி படமாக மாற்றிய தாய்மார்களுக்கு மிக மிக நன்றி. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் குடும்பத்திலும் இது போன்று நடந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பல நபர்கள் பலவிதமான தங்கள் வாழ்க்கையில் நடந்ததை என்னிடம் பகிர்ந்துள்ளனர். சினிமா என்று இல்லாமல் அனைவரின் வாழ்க்கையில் இணைக்கக்கூடிய படமாக இது இருக்கும். கதாநாயகனாக தொடர்ந்து வெற்றி படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் மக்களே கூறுங்கள் நகைச்சுவை நாயகனாக இருக்க வேண்டுமா அல்லது கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்று. எங்கு இருக்க வேண்டும் என்பதை மக்களே கூறட்டும். தற்போது இங்கு இருப்பதற்கு மக்களே காரணம். மக்கள் வரவேற்பு இல்லாமல் எந்த ஒரு விஷயமும் நடக்காது. தற்போது எங்களது உணவகம் மக்கள் வரவேற்பு காரணமாக உயர்ந்துள்ளது. நகைச்சுவை என்பது எல்லோரிடமும் இருக்கும். கதாநாயகனாக நடித்தாலும் நகைச்சுவை கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ஹீரோவாக நடித்தாலும் இதை கொடுக்க வேண்டும்.. இதான் என்னுடைய ஆசை - நடிகர் சூரி

நகைச்சுவைக்கு என தனி உருவம் கிடையாது. பெரிய கதாநாயகருடன் நகைச்சுவை நடிகராக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு கதாநாயகனாக தற்போது நடிக்கும்  வாய்ப்புக்கு இடையூறு இல்லாமல் பெரிய நடிகருடன் நகைச்சுவை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நடிப்பேன். சமூக வலைதளங்களில் புது படங்கள் வெளியாகும் போது அதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. நல்ல படங்களை பல கோடி செலவு செய்து எடுத்துவிட்டு இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் எப்படி வரும், மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா என கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கும் பொழுது தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

புது படங்களை திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் வெளியிடுவது மற்றொருவர் குழந்தையை கொண்டு வந்து கொள்வதற்கு சமம். இதனை செய்பவர்கள் பல வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதனை வரவேற்க கூடாது. பல வருடங்களாக அனைத்து அரசுகளும் இதனை ஒழிக்க பல வழிகளை செய்து வருகின்றனர். ஆனால் தற்போது மக்கள் புறக்கணித்து வருகின்றனர். என்ன இருந்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்பது எங்கும் கிடைக்காது. சமூக வலைதளங்களில் படங்கள் பார்த்தாலும் படம் நன்றாக இருந்தால் மீண்டும் தியேட்டரில் வந்து மக்கள் பார்க்கின்றனர். மக்கள் தியேட்டருக்கான வரவேற்பு கொடுத்து தான் வருகின்றனர். FMS கொடுப்பதால் தான் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு அப்பொழுதுதான் வெளிநாடுகளுக்கும் படங்கள் சென்று சேரும். நல்லது நடக்க வேண்டும் என 4 பேர் நினைக்கும் பொழுது 2 பேர் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்” என்றார்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
Embed widget