மேலும் அறிய
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் கொலையான பெண் - பரிதவித்து நிற்கும் குடும்பம்.

மதுரை
Source : whatsapp
மதுரையில் தேவையற்ற நட்பால் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை நம்பியே இருந்த குழந்தைகள், கணவர் என குடும்பமே பரிதவித்து நிற்கின்றனர்.
தவறுதலாக ஏற்பட்ட நட்பு
மதுரை மாநகர் புது ராமநாதபுரம் சாலை கணபதி மில் தெரு பகுதியைச் சேர்ந்த சாந்தா(33) இவரது கணவர் செல்வகுமார் கீழமாசி வீதி பகுதியில் உள்ள கடை ஒன்றில்பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். செல்வக்குமாரின் மனைவி சாந்தாவுடன் மதுரை காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த சரவணன் பிரபு (25) என்ற இளைஞர் நட்பாக இருந்துவந்துள்ளார். இதனால் அடிக்கடி நேரில் சந்தித்து பேசிவந்துள்ளனர். இது குறித்து அறிந்த சாந்தாவின் கணவர் செல்வகுமார் கண்டித்துள்ளார். இதன் காரணமாக சரவணபிரபுவுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். ஆனால் சரவணபிரபு தொடர்ந்து சாந்தாவை பின் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று இரவு சாந்தவின் கணவர் அவசர வேலை காரணமாக செல்வகுமார் கடைக்கு சென்றுள்ளார். அப்போது தனது பிள்ளைகளை தூங்கவைத்தவிட்டு சாந்தா வீட்டில் இருந்தபோது சரவணன் பிரபு திடிரென வீட்டிற்குள் சென்று தன்னுடன் பேசாமல் இருப்பது ஏன் என கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமடைந்த சரவணன் பிரபு கையில் வைத்திருந்த கத்தியால் சாந்தாவின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால் கழுத்தில் ரத்தம் வழிந் நிலையில் கூச்சலிட்டபடி காயத்தோடு வீட்டிற்கு வெளியில் வந்த சாந்தா ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
இதனை பார்த்த பொதுமக்கள் சாந்தாவை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்தாவை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சரவண பிரபுவை காவல்துறையினர் தேடிவருகின்றனர். மதுரையில் தேவையற்ற நட்பால் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை நம்பியே இருந்த குழந்தைகள், கணவர் என குடும்பமே பரிதவித்து நிற்கின்றனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















