மேலும் அறிய

ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்

'பாரத சேவா' மற்றும் 'மக்கள் மேடை' இணையதளங்கள் தொடக்கம் - லதா ரஜினிகாந்த் அறிவிப்பு

" பாரத சேவா இணையதளம் தொடக்க விழா "

மக்கள் மேடை அமைப்பு சார்பில் பாரத சேவா இணையதள தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் நடைபெற்றது. ஶ்ரீ தயா அறக் கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ள சமூக நலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

மேலும் , வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பயன் பெறும் வகையில் ‘ மக்கள் மேடை’ இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த் ;

இந்த மக்கள் சேவை 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஒவ்வொரு செங்கல்லாக அமைப்பை கட்டியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு புதிய கல்வி முறையை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும்.

பல ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அதிகளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே ‘ மக்கள் மேடை ' இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டுப் பற்று எல்லாவற்றையும் விட பெரியது. ரஜினிகாந்தின் ஆதரவை விட ஆசீர்வாதம் தான் எங்களுக்கு முக்கியம்

காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பாக 2002 - ம் ஆண்டு காலத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக ரஜினிகாந்த் கடந்த காலத்தில் தெரிவித்த கருத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த் ;

இது ஒரு அரசியல் கேள்வி , காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம் , எந்த வேளையில் நடக்கிறதோ,  அப்போது ரஜினிகாந்த் கண்டிப்பாக செய்வார். ரஜினிகாந்த் 100 சதவீதம் எனக்கு ஆதரவு அளிக்கிறார். அவருடைய ஆதரவை விட அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு முக்கியம்.

மக்கள் மேடை இணையதளம் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கான தளமாக மட்டுமா அல்லது பொது மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் தளமாகவும் செயல்படுமா என்ற கேள்விக்கு ? 

இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. மக்கள் பிரச்சினை தான் அரசாங்க பிரச்சினை. அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலைமை வந்தால் , அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget