மேலும் அறிய

Actor Soori: அட நம்ம சூரிப்பா! திருமதி செல்வம் சீரியலில் நடிச்சதை கவனிக்காம போயிட்டோமே!

Actor Soori : சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' சீரியலில் நடிகர் சூரி இடம்பெற்று இருக்கும் பிளாஷ் பேக் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகனாகி விட வேண்டும் என ஏராளமான கனவுகளுடன் சென்னையை நோக்கி பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களில் வெற்றி பெறுபவர் கொஞ்சம் தான். ஆனால், ஒரு சிலர் நீண்ட கால போராட்டங்களுக்கு பிறகு தனித்து தெரிவது என்பது அவர்களின் கடுமையான உழைப்புக்கும், பொறுமைக்கும், திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரம். அப்படி பல போராட்டங்களை எதிர்கொண்டு இன்று வெற்றியாளனாக திகழும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூரி. 

Actor Soori: அட நம்ம சூரிப்பா! திருமதி செல்வம் சீரியலில் நடிச்சதை கவனிக்காம போயிட்டோமே!

ப்ரேக்கிங் தந்த வெண்ணிலா கபடி குழு:

க்ளீனராக, பெயிண்டராக, எலெக்ட்ரீஷனாக சினிமாவில் வாழ்க்கையை ஆரம்பித்த சூரிக்கு முதலில் ஒரு சில படங்களில் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன் முதலில் ஒரு கேரக்டராக அறிமுகமானது 2009ம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் தான். பரோட்டா சாப்பிடும் போட்டியை வைத்து காமெடி சீன் ஒன்று இடம்பெற்று இருக்கும். அது இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதற்கு பிறகு அவர் பரோட்டா சூரி என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.  சிவகார்த்திகேயன் உடன் சூரி நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் அவருக்கு நல்ல ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் படமாக அமைந்தது.

காமெடியன் டூ ஹீரோ:

நடிகர் சூரியின் வித்தியாசமான வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் என  வித்தியாசம் காட்டியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படிப்படியாக முதன்மை நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை வெகு சிறப்பாக பயன்படுத்தி கொண்டு  அடுத்தடுத்த கட்டத்தை நெருங்கி வருகிறார் சூரி. அவரின் இத்தனை ஆண்டு கால போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது. 

Actor Soori: அட நம்ம சூரிப்பா! திருமதி செல்வம் சீரியலில் நடிச்சதை கவனிக்காம போயிட்டோமே!

சீரியலில் சூரி:

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் சூரியின் பிளாஷ் பேக் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான 'திருமதி செல்வம்' தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. கதாநாயகன் சஞ்சீவ் நடத்தி வரும் மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையனாக நடித்திருந்தார் சூரி. அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

உழைப்பும் திறமையும் இருந்தால் ஒருவரால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் நடிகர் சூரி. தற்போது விடுதலை பார்ட் 2 , கருடன், கொட்டுக்காளி, அடமெண்ட் கேர்ள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!

BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 

விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!

என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 

Embed widget