மேலும் அறிய

ஜல்லிக்கட்டு போல.. 'மண்டாடி' இருக்கும், பிறந்தநாளில் விழாவில் சூரி சொன்ன ஸ்வாரசியம் !

அனைவருக்கும் விஜயைப் பிடிக்கும், எனக்கும் அவரைப் பிடிக்கும், என்னையும் அவருக்கு பிடிக்கும். அரசியல் செல்வது அவருடைய விருப்பம் - நடிகர் சூரி சொன்ன பதில்

 
சூரியின் ரசிகர்கள் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்தனர்
 
நடிகர் சூரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை, தனது குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் கொண்டாடிய அவர், தனது பிறந்தநாளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தொடங்கினார். பிறந்தநாள் கொண்டாட்டம்...,” மதுரையில் உள்ள தனது ராசாக்கூர் வீட்டிற்குச் சென்ற, 'தலைவன் தலைவி' படத்தில் பூசாரியாக நடித்த சங்கர், சூரிக்கு பிறந்தநாள் கேக் ஊட்டி தனது அன்பைப் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு, சூரி தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அகில இந்திய சூரி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பில், ரசிகர்கள் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து, ஆரவாரமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
 
இரட்டை பிறவிகள்
 
தனது பிறந்தநாளை ஒட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற நடிகர் சூரி, அங்கு சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சாமி தரிசனம் செய்து திரும்பிய சூரி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன்-லட்சுமணன் போல நானும் என் தம்பியும் இரட்டைப் பிறவிகள்" என்று கூறி நெகிழ்ந்தார்.
 
அம்மன் உணவகத்தின் வெற்றி
 
தான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு, தனது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள்தான் முழு காரணம் என சூரி தெரிவித்தார். "அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால், அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது. அம்மன் உணவகத்தின் வளர்ச்சிக்கு எனது தம்பிகள், அண்ணன்கள்தான் முழு காரணம். அம்மன் உணவகத்தால் தான் எனக்குப் பெருமை.
 
‘மண்டாடி' படப்பிடிப்பு
 
'மாமன்' திரைப்படத்திற்குப் பிறகு, தனது அடுத்த படமான 'மண்டாடி' படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சூரி தெரிவித்தார். "வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எப்படியோ, அதேபோல் கடலில் நடைபெறும் வீர விளையாட்டான போட் ரேசிங் தான் 'மண்டாடி' படத்தின் கதைக்களம். திரைப்படம் வரும்போது நிறைய விஷயங்கள் தெரியவரும். திரைப்படங்களில் காமெடி நடிகர்கள் குறைந்து வருவது குறித்து கேட்டதற்கு, "திரையில் காமெடிகள் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து அனைவரும் வர வேண்டும். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள், அதனால் நான் நல்லா வந்திருக்கேன். அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை
 
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் குறித்த விமர்சனம் குறித்து கேட்டபோது, "இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும், எல்லாருக்கும் எல்லாரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலைத் தாண்டி, எல்லாரும் எல்லாத்தையும் மதிக்க வேண்டும். இன்று விஜய் நடிப்பில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு போயிருக்கிறார். அடுத்து திருப்பி வரலாம். அனைவருக்கும் விஜயைப் பிடிக்கும், எனக்கும் அவரைப் பிடிக்கும், என்னையும் அவருக்கு பிடிக்கும். அரசியல் செல்வது அவருடைய விருப்பம்" என்று சூரி தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
 

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget