Silambarasan TR: சாமியாராக மாறிய சிம்பு.. கமல் தயாரிக்கும் படத்துக்கு இவ்வளவு மெனக்கெடலா? ..வியக்கும் ரசிகர்கள்..!
நடிகர் சிலம்பரசனின் புதிய தோற்றம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
![Silambarasan TR: சாமியாராக மாறிய சிம்பு.. கமல் தயாரிக்கும் படத்துக்கு இவ்வளவு மெனக்கெடலா? ..வியக்கும் ரசிகர்கள்..! Actor Silambarasan tr latest photo viral in social media Silambarasan TR: சாமியாராக மாறிய சிம்பு.. கமல் தயாரிக்கும் படத்துக்கு இவ்வளவு மெனக்கெடலா? ..வியக்கும் ரசிகர்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/04/50d7b26724c813bcdfff26c57367db5b1693833264289572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சிலம்பரசனின் புதிய தோற்றம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கமலுடன் கைக்கோர்க்கும் சிம்பு
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என கொண்டாடப்படும் நடிகர் சிலம்பரசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு படம் அவருக்கு கம்பேக் ஆக அமைந்தது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தைத் தொடர்ந்து மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்கள் வெளியானதால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இதில் பத்து தல ஏஜிஆர் ஆக மிரட்டியிருந்தார் சிலம்பரசன்.
இதனிடையே சிம்புவின் 48வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் 10 ஆம் தேதி வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் படம் குறித்த அறிவிப்பை “கனவுகள் நிச்சயம் நனவாகும்” என்ற கேப்ஷனுடன் சிலம்பரசன் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். கமல் - சிம்பு கூட்டணி திரையுலகினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் சிம்புவின் சினிமா கேரியல் சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thalaivaa 😍🛐🔥#SilambarasanTR #STR48 @SilambarasanTR_ @desingh_dppic.twitter.com/ZipvoBhuOw
— Kamal STR 😎 (@kamal_STR1) September 4, 2023
சிம்புவின் மறுபக்கம் வெளிப்படும்
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, “சிம்புவுடன் தான் இணைய இருக்கும் படம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு வரலாற்று படமாக இருக்கும். அதேபோல் இந்த படத்தில் இதுவரை யாரும் பார்க்காத சிம்புவின் மறுபக்கம் வெளிப்படும். இது மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் படப்பிடிப்புக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டதாகவும் தற்போது ஷூட்டிங் செல்வதற்கான நேரம் வந்து விட்டதாகவும் எனவும் தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில் சிம்புவும், தேசிங்கு பெரியசாமியும் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. வரலாற்று படம் என்பதால் அதற்காக சிம்பு அளவுக்கதிகமாக முடி வளர்த்துள்ளார். இதில் சிம்புவின் முகம் காட்டப்படவில்லை. அவர் புலி உறுமுவது போல டி-ஷர்ட் ஒன்றை அணிந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ‘சிம்புவா இது’ என கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)