மேலும் அறிய

Siddharth - Aditirao Marriage: டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்

பிரபல நடிகர் சித்தார்த்திற்கும், பிரபல நடிகை அதிதிராவிற்கும் மிக எளிமையாக தெலங்கானாவில் இன்று திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தி்யில் மிகவும் பிரபலமானவர். இவரும் நடிகை  அதிதிராவும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்தனர். எந்தவொரு நிகழ்ச்சியிலும் இருவரும் இணைந்தே வந்த நிலையில், இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

சித்தார்த் - அதிதிராவ் திருமணம்:

இவர்களது திருமணம் தெலங்கானாவில் வனர்பதி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் நடைபெற்றது. மணமக்களான அதிதிராவ் – சித்தார்த் ஜோடிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சமீபகாலமாகவே ஒன்றாக பொதுவெளியில் உலா வந்த சித்தார்த் – அதிதிராவ் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக தகவல்கள் வந்தது. சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று திருமணம் நடந்துள்ளது

View this post on Instagram
 
A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

எளிமை:

கடந்த மார்ச் மாதம் நடந்தது திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே திருமணம் இல்லை என்றும் விரைவில் திருமணம் என்றும் அதிதி தகவல் தெரிவித்தார். இந்த நிலையில், மிக எளிமையாக சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் நடைபெற்றுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட சித்தார்த்திற்கு தற்போது 45 வயதாகிறது. மணிரத்னத்தின் உதவி இயக்குனராக திரைத்துறையில் உள்ளே வந்தவர் பாய்ஸ் படம் மூலமாக கதாநாயகன் ஆனார், துறுதுறுப்பான இளைஞராக அறிமுகமான சித்தார்த் தற்போது வரை அதே இளமையுடன் இருப்பது அவரது பலமாக அமைந்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர், 2007ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துள்ள சித்தார்த் மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் அதிதிராவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. 37 வயதான அதிதி ராவ் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget