மேலும் அறிய

Shanthanu Bhagyaraj: 8 வருடங்கள் பிரிந்தே இருந்த சாந்தனு - கீர்த்தி..! மீண்டும் ஒன்று சேர்ந்தது எப்படி?

கீர்த்தியை பிரிந்து  கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2வது முறையாக காதலில் விழுந்ததாக நடிகர் சாந்தனு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கீர்த்தியை பிரிந்து  கிட்டதட்ட 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2வது முறையாக காதலில் விழுந்ததாக நடிகர் சாந்தனு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ராவணக் கோட்டம்:

இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் சக்கரக்கட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. இவர் இன்னும் தனக்கென ஒரு தனியிடம் கிடைக்க போராடி வருகிறார். அப்படியான நிலையில் இன்று (மே 12) விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடித்த “இராவணக்கோட்டம்” படம் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள இப்படம் நிச்சயம் சாந்தனுவுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமையும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே சாந்தனு தனது பள்ளி பருவ தோழியான பிரபல தொகுப்பாளியான கீர்த்தியை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் காதலித்து பிரிந்த நிலையில் மீண்டும் தங்கள் காதல் எப்படி ஒன்று சேர்ந்தது என்ற கதையை தெரிவித்துள்ளார். 

8 ஆண்டுகள்:

அந்த நேர்காணலில், “நான் முதலில் கீர்த்தியை பள்ளி படிக்கும் போது பார்த்தேன். அந்த வயசுல ரொம்ப விளையாட்டுத்தனமா சண்டை போட்டு பேசிக்காம இருப்போம். அந்த மாதிரி 2 நாள் பேசாம இருந்தேன். அதற்கிடையில் வெளியே சென்றிருந்தபோது ஏதேச்சையாக பெண் தோழி ஒருவரை பார்த்தோம். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தோம். உடனே அந்த பெண், ஒரு காஃபி குடிக்கலாமா? என கேட்டார். ஆனால் எதையும் யோசிக்காமல் ஓகே என சென்றுவிட்டேன். அதை கீர்த்தியிடம் சொல்லவில்லை. 

காஃபி ஷாப்பிற்கு சென்ற நிலையில் திடீரென அவரிடமிருந்து போன் வருகிறது. நான் பதறிப்போய் டேபிளுக்கு அடியில் சென்று “என்னம்மா” என பேசுகிறேன். எங்க இருக்க என்ற கேள்வி எழ, நான் அப்பா (பாக்யராஜ்) உடன் டிஸ்கஷனில் இருக்கிறேன் என சொன்னேன். எங்க இந்த காஃபி ஷாப்ல நடக்குதா என கீர்த்தி பதில் கேள்வி கேட்டார். நான் அதிர்ச்சியடைந்து சுற்றி பார்த்தால் அவர் இல்லை. ஆனால் யாரோ ஒரு ஃப்ரண்ட் போன் பண்ணி பற்றவைத்து விட்டு சென்றுவிட்டார். அன்னைக்கு நாங்க பிரிந்து விட்டோம். கிட்டதட்ட மீண்டும் ஒன்று சேர 8 ஆண்டுகள் ஆனது. 

சிறந்த தருணம்:

அதன்பிறகு நாங்கள் நண்பர்களாக இருந்தோம். ஒரு மேடையில் நாங்கள் சேர்ந்து டான்ஸ் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் நண்பர்கள் சேர்ந்து கமலின் காதல் பாட்டுக்கு ஆட வைத்து மீண்டும் எங்களுக்குள் இருந்த காதலை வளர்த்து விட்டார்கள். பொதுவாகவே நாங்கள் இருவரும் தனியாக போக மாட்டோம். எங்க போனாலும் நண்பர்களுடன் தான் செல்வோம். அப்படி ஒருநாள் படத்துக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றது அப்பாவுக்கு தெரிந்து விட்டது. 

மேலும் கீர்த்தி காதலியாக இருந்து மனைவியாக மாறிய தருணம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை பேருக்கு காதல் ஜெயித்து திருமணம் வரை செல்வது நடக்கிறது. திருமணம் முடிந்த 3 மாதங்கள் வரை எங்களுக்குள் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே நம்ப முடியவில்லை. அப்படி ஒரு சிறந்த தருணமாக இருந்ததது” என சாந்தனு தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
IND vs NZ Final: கேட்ச்களை கோட்டை விடும் இந்தியா.. விக்கெட் வேட்டை நடத்தும் வருண், குல்தீப்! மிரட்டுவாரா மிட்செல்?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு
Embed widget