மேலும் அறிய
Advertisement
(Source: Poll of Polls)
'வெற்றிமாறனின் விமர்சனம் குறித்து அவரிடமே கேளுங்கள்' - சரத்குமார் ஆவேசம்
பொன்னியின் செல்வன் கதை இயக்குனர் வெற்றிமாறன் விமர்ச்சனம் குறித்து படத்தின் இயக்குனரிடம் கேளுங்கள் குமரியில் நடிகர் சரத்குமார் ஆவேச பேட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆழி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்படிப்பில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் சரத்குமார் அம்மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆலயங்களுள் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதைதொடர்ந்து பக்தர்கள் மற்றும் ஆலயபணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸான 3ஆவது நாளிலேயே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது. இத்திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்திருக்கிறார் நடிகர் சரத்குமார்.
குமரியில் சரத்குமார்
ஆலயத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ”குமரியில் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றும் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து திருவட்டார் ஆதிகேசவபெருமாளை தரிசிக்க நினைத்தும் வர இயலாமல் போனது வருத்தமளித்தது” என பேசினார். ஆனாலும், இன்று ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய இயன்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தை சரத்குமார் நிறைவுபடுத்துவார் என்று மணிரத்னம் அவர்களின் எண்ணத்தில் உதித்தற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துகொள்வதாகவும் படத்தில் மையகதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் மக்களை சென்றடைவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
சமக கட்சியில் செயல்பாடுகள் தற்போது அமைதியாக உள்ளது குறித்த செயல்பாடுகளுக்கு பதிலளித்த சரத்குமார் கூறுகையில், அமைதியாக இருக்கின்ற நதிதான் ஆழமாக பாயுமெனவும் கூறினார். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவடைந்தபோதிலும் ஓவிய பணிகள் நிறைவடையாததது குறித்து பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதை குறித்து பேசவேண்டிய இடத்தில் பேசிகொள்வதாகவும் குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என கூறிவிட்டும் டாஸ்மாக் கடைகளை தடை செய்யவில்லையே சிகரெட் பிடிப்பது கேடுவிளவிக்கும் என விளம்பரம் செய்துவிட்டு சிகரெட் விற்பனை நடைபெற்றுவருகிறது.
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தடைசெய்தால் அதில் நடிப்பது நிறுத்தப்படும் எனவும் அதுபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டை முற்றிலுமாக தடை செய்தால் அதில் நடிப்பதை நிறுத்திவிடுவதாகவும் எந்த ஆன்லைனிலும் யாரும் சென்று விளையாதபடி தமிழக அரசு தடை செய்யவேண்டும் எனவும் கூறினார். பொன்னியின் செல்வம் கதை சித்தரிக்கபட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தவர் படத்தின் இயக்குனரிடம் தான் கேட்கவேண்டும் இது சுதந்திர நாடு யாரும் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்யலாம், மேலும் தான் இந்த கருத்து குறித்து பதில் சொல்லவிரும்பவில்லை எனவும் எதை தவிர்க்க வேண்டுமோ அதை தவிர்க்கவேண்டுமெனவும் நல்லது மட்டுமே பேசவேண்டுமென நினைத்து பேசுவதாகவும் படத்தில் நடித்ததால் மட்டுமே நான் கூறும் கருத்துகள் ஏற்றுகொள்ளபடுமா அந்த கருத்துக்களை படத்தில் இயக்குனரிடம் போய் கேட்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
தேர்தல் 2024
தேர்தல் 2024
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion