எல்லாம் இழந்து வெறுங்காலில் அவரிடம் சென்றேன்...கெனிஷா பற்றி ரவி மோகன் உருக்கம்
கார் , உடமைகள் , தன்மானம் எல்லாவற்றையும் இழந்து அந்த இரவு நான் அவரிடம் சென்ற அந்த இரவு எனக்கு துணையாக நிற்க கெனிஷா முடிவு செய்தார்

மனைவிக்கு எதிராக ரவி மோகன் அறிக்கை
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்திக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் ரவி மோகன் கெனிஷா பற்றியும் புகழ்ந்து பேசியுள்ளார்.
பணம் பறிக்க வேஷம் போடுகிறார் ஆர்த்தி
என்னையும் ஒரு பிரபலத்தை வைத்து சில ஆண்டுகள் முன்பு செய்தி வெளியானதும் என்னை வலுகட்டாயப்படுத்தி என்னுடைய பாதி சொத்துக்கள் பறிக்கப்பட்டன. தற்போது என் முன்னாள் மனைவி மற்றும் அவருடன் இருக்கும் தீயவர்கள் சேர்ந்து என் குழந்தைகளை என்னிடம் இருந்து பிரிப்பதற்காகவும் என்னிடம் இருந்து நிதி ஆதாயம் பெறுவதற்காகவும் நான் அவரை பொருளாதார ரீதியாக சுரண்டியதாக என் மீது அவதூறு பறப்புவதை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் முரணாகவும் இருக்கிறது.
அதே நேரம் பொது ஊடகங்கள் ஒரு தந்தையாகவும், ஒரு கனவராகவும் என்னைப் பற்றி வேறு ஒரு கதையை கட்டுகிறார்கள். ஆனால் நான் இதுவரை வெறுப்புடனோ கோபத்திலோ பதிலளிக்கவில்லை. என்னுடைய குழந்தைகள் இதில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அமைதியை வேண்டுகிறேன். முடிவு நீதிமன்றத்தில் கிடைக்க வேண்டும் சமூக வலைதளங்களில் இல்லை. ஆனால் என் மனைவியைப் போல் புகழை விரும்புபவர்களுக்கு சர்ச்சையை ஏற்படுத்துவது தான் மிகப்பெரிய கருவியாக இருக்கிறது. இவர்கள் வலியை கொடுத்து அனுபவிப்பவர்கள். இதை நான் அந்த வீட்டில் இருந்து பார்த்திக்கிறேன். இப்போது நான் பேசுவது நாடகம் போடுவதற்காக இல்லை என்னுடைய குரலை திரும்ப பெறுவதற்காக.
கெனிஷாவைப் பற்றி ரவி மோகன்
"ஒரு நல்ல தோழியாக கெனிஷா என் வாழ்க்கையில் வந்தார். மூழ்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு ஆதரவு கொடுக்க அவர் முடிவு செய்தார். குடும்பத்தால் கைவிடப்பட்டு அதைவிட்டு வெளியேறி ரத்தமும் கண்ணீருமாக இருந்த எனக்கு ஒரு வாழ்க்கையைக் காப்பாற்றிய ஒருவராக மாறிவிட்டார். என் பர்சில் பணமில்லாமல் , வெறுங்காலுடம் நைட் சூட்டில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் . கார் , உடமைகள் , தன்மானம் எல்லாவற்றையும் இழந்து அந்த இரவு நான் அவரிடம் சென்றபோது எனக்கு துணையாக நின்றார். இந்த பிரச்சனையின் தீவிரம் தெரிந்தும் கெனிஷா சற்றும் தயக்கம் காட்டவில்லை. அவர் எனக்காக நின்றார். அவர் ஒரு அழகான துணை.
சட்டரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் , உணர்வு ரீதியாகவும் நான் எதிர்கொள்ளும் போராட்டங்களை அவர் பார்த்து எனக்காக நின்றார். புகழுக்காக இல்லை எனக்கு நம்பிக்கை கொடுக்க. நான் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவன் என்பதை எனக்கு உணர்த்தினார் . என்னைப் போல் மெளமாக போராடி வருபவர்களுக்கு நான் பேசுவேன். கென்சிஷா மற்றும் என் பெற்றோர்கள் எனக்கு செய்த உதவி மிக உன்னதமானது . கெனிஷாவைப் பற்றியோ அவரது வேலை பற்றியோ எந்த விதமான அவதூறுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன்.
அவர் ஒரு ஆன்மிக ஆலோசகர். ஒரு சிறந்த பாடகியும் கூட . என்னுடைய எல்லா பிரச்சனைகளையும் கேட்டபின் எனக்கு ஒரு நல்ல தோழியாக இருந்துதான் தன்னால் உதவ முடியும் என்றும் ஒரு ஆலோசகராக இருந்தில்லை என்பதை தெளிவாக என்னிடம் சொல்லிவிட்டார். ஏனால் இது சட்டத்திற்கு எதிரானது. அவளுடைய வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமைதியாக வாழ்கிறார்கள், NDA-க்களால் பிணைக்கப்பட்டு, நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால் எனக்கு உண்மை தெரியும். என்னை அறிந்தவர்களுக்கு என் நன்றியுணர்வு தெரியும். நான் இதைச் சொல்வேன், நீங்கள் என்னை மதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் கெனீஷாவுக்கும் அதையே செய்வீர்கள் - தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும். என்னை யார் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலி. யாரும் யாருடைய வீட்டை சிதைக்கவோ , வாழ்க்கையை அழிக்கவோ முடியாது. ஒரு சில முறை கடிவாங்கினால் பரவாயில்லை ஆனால் நான் ஒரு மில்லியன் முறை கடிக்கப்பட்டேன், அதனால் நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். அதனால் இதை எல்லாம் கடந்து என்னுடைய லட்சியமான சினிமாவை நான் தொடர நீங்கள் எனக்கு ஆதவளிப்பீர்கள் என நம்புகிறேன்" என ரவி மோகன் தெரிவித்துள்ளார்.





















