Ravi Mohan: காதலை கன்ஃபார்ம் செய்த ரவி மோகன் - ஆர்த்தியுடன் விவாகரத்து... கெனிஷாவுடன் 2ஆவது திருமணமா?
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரவி மோகன் தனது காதலியுடன் வந்தது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த ரவி மோகன் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையிலும் தலைப்புச் செய்திகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் மனைவியை பிரிவதாக அறிவித்தது தான்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார். தற்போது இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் ரவி மோகன் 2ஆவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இப்போது ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இது தான் இப்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தனது மூத்த மகளான பிரீத்தாவிற்கு சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா, அரசியல் பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என்று சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் தான் நடிகர் ரவி மோகனும் கலந்து கொண்டுள்ளார். அவர் மட்டும் கலந்து கொண்டிருந்தால் சோஷியல் மீடியாவில் வலம் வந்திருக்க மாட்டார். ஆனால், அவர் தன்னுடைய காதலி என்று சொல்லப்படும் கெனிஷாவுடன் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் ஒரே மாதிரியான கலரில் உடை அணிந்து வந்திருக்கின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் காதலித்து வருவது உண்மை என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆர்த்தி உடனான விவாகரத்தின் போது ரவி மோகன் மற்றும் கெனிஷா இடையில் பழக்கம் இருப்பதாகவும், அதனால் தான் ஆர்த்தியை விவாகரத்து செய்தார் என்றும் கூறப்பட்டது. அதற்கு ரவி மோகனும் விளக்கம் கொடுத்திருந்தார். அதில், கெனிஷாவும் நானும் நண்பர்கள். இனிமேல் அவரைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஐசர் கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து வந்தது மட்டுமின்றி இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தனர். இது வெறும் டீசர் மட்டும் தான். ஒரே வேளை இப்படி வந்தால் சோஷியல் மீடியாவில் எப்படியெல்லாம் பேசப்படுகிறது என்பதை வைத்து 2ஆவது திருமணம் குறித்து ரவி மோகன் அறிவிக்க திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு முடிந்து அதில் தீர்ப்பு வழக்கப்பட்ட உடன் ரவி மோகன் தனது 2ஆவது திருமணம் குறித்து அறிவிப்பார் ... என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















