![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ramarajan: கரகாட்டக்காரன் படமே வேண்டாம் என சொன்ன ராமராஜன்.. எல்லாம் அந்த நடிகரால்தான்!
சிவாஜி கணேசன், பத்மினி நடித்திருந்த தில்லானா மோகனாம்பாள் கதையை சற்றே மாற்றி அதில் கரகம் கலையை வைத்து எடுத்த படம் தான் கரகாட்டக்காரன்
![Ramarajan: கரகாட்டக்காரன் படமே வேண்டாம் என சொன்ன ராமராஜன்.. எல்லாம் அந்த நடிகரால்தான்! actor ramarajan talks about his famous movie karakattakaran Ramarajan: கரகாட்டக்காரன் படமே வேண்டாம் என சொன்ன ராமராஜன்.. எல்லாம் அந்த நடிகரால்தான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/5e43ba56bc20606c63841f7ee7f977d81717833541505572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல நடிகர் ராமராஜன் தனக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுக் கொடுத்த கரக்காட்டக்காரன் படத்தில் நடிக்க மறுத்த கதையை தெரிவித்துள்ளார்.
உதவி இயக்குநராக சினிமாவில் தன் வாழ்க்கையை தொடங்கிய ராமராஜன் சில படங்களை இயக்கியுள்ளார்.1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு படம் மூலம் ஹீரோவான அவர் 4 வருடங்கள் மட்டுமே நடித்தார். அந்த 4 ஆண்டுகளிலும் ரஜினி, கமல் என அன்றைய முன்னணி நடிகர்களுக்கும் சவால் விடும் வகையில் ராமராஜன் திகழ்ந்தார். அப்படியான அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கிய படம் “கரகாட்டக்காரன்”. 1989 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, சந்திரசேகர், சண்முக சுந்தரம், காந்திமதி, சந்தானபாரதி, ஜூனியர் பாலையா என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர்.
சிவாஜி கணேசன், பத்மினி நடித்திருந்த தில்லானா மோகனாம்பாள் கதையை சற்றே மாற்றி அதில் கரகம் கலையை வைத்து எடுத்த படம் தான் கரகாட்டக்காரன். இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்த நிலையில் சுமார் ஒரு வருடம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் கவுண்டமணி தவில் வாசிப்பவராக நடித்திருப்பார்.
இதனிடையே 10 வருடங்கள் கழித்து ராமராஜன் சமீபத்தில் சாமானியன் என்ற படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு சிறந்த கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது.அந்த படத்தின் நேர்காணலின் தான் கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க மறுத்ததை பற்றி பகிர்ந்திருந்தார். அந்த நேர்காணலில் பேசிய ராமராஜன், “கரகாட்டக்காரன் படத்தில் முதலில் கவுண்டமணி கேரக்டருக்கு எஸ் எஸ் சந்திரனை தான் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் அவர் கட்சி ரீதியாக திமுகவை சேர்ந்தவர். நான் அதிமுகவை சேர்ந்தவன். தயாரிப்பாளரும், இயக்குனர் கங்கை அமரன் என அனைவரும் எஸ்.எஸ்.சந்திரன் தான் அந்த கேரக்டருக்கு என உறுதியாக சொன்னார்கள். நான் நடந்ததை சொல்லி கவுண்டமணியை போடலாம் என நிர்வாகத்திடம் சொன்னேன். அவர்கள் முடியவே முடியாது என சொல்லி விட்டார்கள். பின்னர் கங்கை அமரனை அழைத்து, எஸ்.எஸ்.சந்திரன் படத்தில் அரசியல் பேசுவார். இது அரசியல் படம் அல்ல என சொன்னேன். கடைசியில் நான் எஸ் .எஸ். சந்திரன் தான் போடுவேன் என சொன்னால் படத்தில் இருந்து விலகி விடுவேன் என சொன்னேன்” என கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)