`777 சார்லி’ க்ளைமாக்ஸ் காட்சியை வியந்து பாராட்டிய ரஜினி.. ரக்ஷித் ஷெட்டிக்கு வந்த தொலைபேசி அழைப்பு!
`777 சார்லி’ படம் பார்த்தவர்கள் அனைவரும் அதனைப் பாராட்டிக் கொண்டிருக்க, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டி சர்ப்ரைஸ் அளித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் வெளியான தன்னுடைய `777 சார்லி’ திரைப்படத்தின் வெற்றியை வெகுவாகக் கொண்டாடி வருகிறார் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி. தற்போது தென்னிந்திய திரையரங்கங்களில் வெவ்வேறு மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `777 சார்லி’ என்ற அட்வெஞ்சர் காமெடி திரைப்படத்தை இயக்கியிருப்பவர் கே.கிரண்ராஜ். `777 சார்லி’ படம் பார்த்தவர்கள் அனைவரும் அதனைப் பாராட்டிக் கொண்டிருக்க, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டி சர்ப்ரைஸ் அளித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி, `இந்த நாளின் தொடக்கமே மிக அற்புதமாக இருக்கிறது.. ரஜினிகாந்த் சாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று இரவு அவர் `777 சார்லி’ படம் பார்த்து, அதுகுறித்து பாராட்டியுள்ளார். படம் உருவாக்கப்பட்ட விதம், அதன் வடிவமைப்புகள் முதலானவற்றைப் பாராட்டிய அவர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து மிகவும் வியந்து பாராட்டினார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
…how it concludes on a spiritual note. To hear such words from the superstar himself is beyond wonderful. Thank you so much @rajinikanth sir 🤗🤗🤗
— Rakshit Shetty (@rakshitshetty) June 22, 2022
தொடர்ந்து மற்றொரு பதிவில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி, `சூப்பர்ஸ்டாரிடம் இருந்தே நேரடியாக இத்தகைய வார்த்தைகளைக் கேட்பது மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்!’ என நடிகர் ரஜினியையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்