மேலும் அறிய

Actor Rajkiran: ''பிரியா என் வளர்ப்பு மகள்..முனீஸ் தரம் கெட்டவர்... பணத்துக்காக எதையும் செய்வார்'' - கொதித்தெழுந்த ராஜ்கிரண்!

சன் டிவியில் ஒளிபரப்பான இயக்குநர் திருமுருகன் இயக்கிய  நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் என்கிற கேரக்டரில் நடித்தன் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் முனீஸ்ராஜா.

தனது மகளை பிரபல சீரியல் நடிகர் முனீஸ்ராஜா காதல் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதுதொடர்பாக நடிகர் ராஜ்கிரண் விளக்கமளித்துள்ளார். 

சன் டிவியில் ஒளிபரப்பான இயக்குநர் திருமுருகன் இயக்கிய  நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் என்கிற கேரக்டரில் நடித்தன் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் முனீஸ்ராஜா. இவர் பிரபல நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பியாவார். அந்த சீரியலில் முனீஸ்ராஜாவின் நடிப்பும்,ஸ்டைலான நடையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த சீரியல் மூலம் பிரபலமான அவர், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் ஹீரோவாக நடித்தார்.

இதற்கிடையில் சீரியலைத் தொடர்ந்து தேவராட்டம் உள்ளிட்ட  சில திரைப்படங்களிலும் முனீஸ்ராஜா நடித்தார். மேலும் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். இதனையடுத்து பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பேஸ்புக் மூலம் இந்த காதல் மலர்ந்ததாகவும், பார்த்தவுடன் பிடித்து விட்டதாகவும் முனீஸ்ராஜா தெரிவித்திருந்தார். 

மேலும்  விஷயம் வீட்டுக்கு தெரிந்ததும்  ஆரம்பத்தில் இரண்டு பேர் வீட்டிலும்  சில விஷயங்களை காரணம் காட்டி இந்தக் காதலை ஏற்கவில்லை எனவும், இதனால் காதல் ஜோடிகள் இருவரும் பதிவுத் திருமணம்  செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் முனீஸ்ராஜா வீட்டில் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில், ராஜ்கிரண் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்றைய தினம் முனீஸ்ராஜா பிரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பதிவு திருமணம் நடந்து கொண்டது உண்மைதான் என்றும், ஊடகங்களில் தவறான தகவல்கள் வந்ததால் வீடியோ வெளியிட வேண்டிய நிலைமை வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் வரவேற்பு நடக்கும் எனவும் தெரிவித்தார். 

ராஜ்கிரண் வெளியிட்ட பேஸ்புக் பதிவு 

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், “என் "மகளை", ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் என்ற நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை "வளர்ப்பு மகள்" என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விசயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது, எனக்குத்தெரிய வந்தது. அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக விசாரித்து தெரிந்து கொண்ட நான், என் வளர்ப்பு பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன்  என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார்.
 
அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப்பெண்ணிடம் அழுது மன்றாடி, எப்படியெப்படியோவெல்லாம் மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, " சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்" என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் தான், என் மனைவியின் தோழியான, "லட்சுமி பார்வதியை" பார்த்து விட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப்பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, என் மனைவி தான் இதற்கெல்லாம் காரணம் என்பது போல், பொய் பொய்யாக  பேசிக்கொண்டு திரிகிறது, இந்தப்பெண். இந்த விசயத்தில் நான் கோபப்பட்டபோது கூட, என்னை சமாதானப்படுத்தி, அந்தப் பெண்ணுக்காக பரிந்து பேசிஇன்று வரை அந்தப்பெண்ணுக்கு உறுதுணையாக நிற்பது, என் மனைவி மட்டும் தான்.
 
பெண்பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது... என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன். 
 
ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம்... இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப் பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால்,அதனால் ஏற்படும் எந்தப்பிரச்சினைக்கும் நான் பொறுப்பல்ல, என்பது தான். இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சீரியல் நடிகர்,தன் குள்ளநரித்தனங்களால், என் வளர்ப்புப்பெண்ணிற்கு கணவனாகிக் கொள்ளக்கூடும். ஆனால், எந்தக்காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது. இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும் என தெரிவித்துள்ளார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
Parasakthi Box Office: கம்பேக் மோடில் பராசக்தி..மீண்டும் கல்லா கட்டுவாரா சிவகார்த்திகேயன்? டஃப் கொடுக்கும் ஜீவா?
JSW Jetour T2: ஃபார்ட்சுனர், தார் மாடலை நான் அடிக்கிறேன்.. ரக்கட் ஆன ஜெடூர் T2.. JSW-வின் புதிய ஹைப்ரிட் கார்
JSW Jetour T2: ஃபார்ட்சுனர், தார் மாடலை நான் அடிக்கிறேன்.. ரக்கட் ஆன ஜெடூர் T2.. JSW-வின் புதிய ஹைப்ரிட் கார்
Embed widget