Jailer First Review: ‘ஜெயிலர் படம் வேற லெவல்’ .. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் விமர்சனம்..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
வெளியானது ஜெயிலர் படம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
களைகட்டிய கொண்டாட்டம்
ஒட்டுமொத்த திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், முன்னதாக வெளியான பாடல்கள், இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தி விட்டது என்றே சொல்லலாம்.ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படம் சரியாக ஓடவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த ரசிகர்களை இப்படம் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி பார்த்த ரஜினி பெரிய அளவில் மன மகிழ்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வழக்கத்தை விட ரசிகர்கள் அதிக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அன்னதானம், இரத்ததானம் என வேற லெவலில் ஜெயிலர் ரிலீஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தியேட்டர் வளாகங்கள் திருவிழா நடக்கும் இடங்கள் போல தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்கள் என களைக்கட்டியுள்ளது. விடிய விடிய ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் விமர்சனம்
இதனிடையே ஜெயிலர் படத்தின் விமர்சனம் என சமூக வலைத்தளங்களில் ஒரு சில பதிவுகள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பதிவில், “சிவாஜி தி பாஸ்” படத்துக்கு பிறகு ஜெயிலர் தான். நான் சிவாஜி படத்தை 50 முறைக்கு மேல் தியேட்டரில் பார்த்துவிட்டேன். அப்படி தான் ஜெயிலர் படமும் இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.அதில் ஜெயிலர் படம் பிற மொழிகளில் டப் செய்ய உபயோகப்படுத்தப்பட்ட ஸ்டூடியோவில் இருந்து வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினி கம்பேக் கொடுத்த பேட்ட படம், அவரது ரசிகர் கார்த்திக் சுப்புராஜின் ஃபேன் பாய் படமாக இருந்தது. ஆனால் ஜெயிலர் படம் அப்படியல்ல, வேற லெவல்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
From the dubbing studio... Good to read and hope it becomes 100% true 🙏 #JailerReview#JailerFDFS #JailerFromTomorrow pic.twitter.com/0QKLBLsssl
— RajaGuru (@swatson2022) August 9, 2023
இதேபோல் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ‘மிர்னா’ தரமான சம்பவம் இன்று காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். எது எப்படியோ ஜெயிலர் படம் தங்களை மகிழ்விக்கும் என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘நெல்சனின் ப்ளாக் பஸ்டர் சம்பவம் இது. இரண்டாம் பாகம் வேற மாறி வேற மாறி. இதில் நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ஸ்பெஷல் விருந்து. க்ளைமாக்ஸ் வெறித்தனம்.’ என பொதுமக்களில் ஒருவர் ஜெயிலர் படத்தின் விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
#Jailer - "Ratham"aarey.. Blockbuster Nelson Sambavam 🔥🔥🥳
— Manibharathi Selvaraj (@smbmanibharathi) August 10, 2023
2nd Half Vera Mari veramariiiiiiii 🔥🔥
Lots of surprise moments & special treat for thalaivar fans 🙌
Climax veriatttammmmm 💥💥💥 gone Blast... (ithukumela reveal pannah virumbala) #JailerFDFS pic.twitter.com/qFCy5bHao5
மேலும் படிக்க: Jailer Release LIVE : ‘அலப்பற கெளப்புறோம் தலைவரு நிரந்தரம்..’ ஜெயிலர் படம் தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் காண...