Jailer Release LIVE : ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..’ மாஸ் காட்டும் ஜெயிலர் படக்குழு!
Jailer Release LIVE Updates : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் உலகெங்கும் இன்று வெளியானது. அதுகுறித்த அப்டேட்டுகளை இங்கு காணலாம்.
LIVE
Background
ஜெயிலர் படம் ரிலீஸ்
ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது.
சூப்பர் ஹிட் அடித்த பாடல்கள்
ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வந்தது. அதன் பின், ஜுலை 6 ஆம் தேதி வெளியான காவாலா தொடக்கத்தில் டரால் வலையில் சிக்கினாலும், நாளடைவில் செம ட்ரெண்டானது. இன்ஸ்டா பக்கத்தில் பார்க்கும் இடம்மெல்லாம்,
காவாலா ரீல்ஸ் தென்பட்டது. அடுத்ததாக, இரண்டாவது சிங்களான ஹுக்கும், ரஜினிகாந்திற்கான பிரத்யேக பாடலாக இருக்கும் என யூகிக்கப்பட்டது. அதன் படி, அப்பாடலில் இடம்பெற்ற ஒவ்வொரு வரியும் ரஜினியின் ரசிகர்களுக்கு கொண்டாடத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது சிங்கிளான ஜு ஜு பி, முதல் இரண்டு பாடல்களை போல் பெரிதாக ஹிட்டாகவில்லை.
இசை வெளியீட்டு விழா சம்பவம்
திரை நட்சத்திரங்கள் சூழ, கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடந்த ஜெயிலரின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்று முடிந்தது. ரஜினியின் மேடை பேச்சு, ஊடகங்களின் கவனத்தையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.
ஜெயிலர் டிக்கெட் முன்பதிவு
ஜெயிலர் படத்திற்கான முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே முதல் நாளிற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.
சென்னை பொறுத்தவரை முதல் நாள் முதல் காட்சி, காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷோ ஸ்கீரின் ஆகும்.
உலகெங்கும் உள்ள ரஜினியின் ரசிகர்கள்
உள்ளூர் முதல் உலகெங்கும் ரஜினிகாந்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிப்பில் வெளியாகும் ஒரு படத்தை கூட மிஸ் செய்யாமல், பார்க்கும் ரசிகர்களை பெற கொடுத்து வைத்துள்ளார் ரஜினி. அதிகமான ரசிகர்களை கொண்ட நட்சத்திரம் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் பேனர் அடித்து, பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
பெங்களூரில் இருக்கும் ரசிகர்கள், இதுவரை வெளியான ரஜினியின் படங்களில் இருக்கும் மாஸான லுக்கை கட்-அவுட்டாக வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், 5000 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கும் ரஜினி ரசிகர்களும் பெங்களூருவில் உள்ளனர். சென்னையில் 9 மணி காட்சி திரையிடப்படுவதால், முதல் காட்சியை சற்று முன்கூட்டியே காண, ரசிகர்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
எவ்வளவு வசூலை அள்ளும் ஜெயிலர்?
இப்போதெல்லாம் படம் வெளியாகும் முன்னரே, படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும், சாட்டிலைட் உரிமத்தையும் விற்றே பாதி லாபம் அடைகின்றனர் தயாரிப்பாளர்கள். பெரிய ஹீரோவின் படமாக இருந்தால், கதை சுமாராக இருந்தாலும் ஏதோ தெறிவிடும். விமர்சன ரீதியாக பின்னடைவு ஏற்பட்டாலும், பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படாது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் நடிக்கும் படக்கதை தரமாக இருந்தால் கேட்கவே வேண்டாம், படம் நிச்சயம் ப்ளாக் பஸ்டர்தான்.
படம் பார்த்த ஜெயிலர் படக்குழுவினர் திருப்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். விநியோகஸ்தர்களும் படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் ஃபயர் இமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
இதுவரை முன்பதிவு மூலம் 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது ஜெயிலர். முதல் நாளில் இந்தியா முழுக்க, ரூபாய் 38 கோடி முதல் ரூபாய் 45 கோடி வரை பெரும் வசூலை பெற்று பெரிய ஓபனிங்கை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வரும் வார இறுதியில் குடும்ப ரசிகர்களை கவனத்தை பெற்று 100 கோடி வசூலை தொடலாம்.
Jailer Release LIVE :ரஜினி அப்பா... என் ரீல் மற்றும் ரியல் ரத்தமாரே...ரஜினிக்கு வசந்த் எழுதிய கடிதம்
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்துள்ள நடிகர் வசந்த் ரஜினிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரஜினியிடம் தான் கற்றுக்கொண்ட பல்வேறு விஷய்ங்களை குறிப்பிட்டு கடைசியில் “ரஜினி அப்பா. ரீல் மற்றும் ரியல் உலகத்தில் நீங்கள் தான் என் ரத்தமாரே . உங்களை அப்பா என்று அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் அவர்
Jailer Release LIVE : அனைத்து கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நெல்சன் - தயாரிப்பாளர் தனஞ்சயன்
ஜெயிலர் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் படத்தை பாராட்டியுள்ளார். ரஜியின் வயதிற்கு ஏற்ற வகையிலான ஒரு கதாபாத்திரத்தை அவருக்கு குடுத்தது சிறப்பான ஒரு முடிவு என்றும். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப் என்று பல முக்கியமான நடிகர்கள் கெளரவ தோற்றத்தில் வரும் அத்தனை நடிகர்களுக்கும் முக்கியமான கதாபாத்திரங்களைக் கொடுத்து அவர்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் என்று அவர் இயக்குநர் நெல்சனைப் பாராட்டியுள்ளார்
தோராயமான ஜெயிலர் பாக்ஸ் ஆபீஸ் விவரம்
Jailer Release LIVE : ஓரளவுக்குமேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்...... இந்தியாவில் வசூலில் வாள் வீசும் ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் மொத்தம் 49 கோடிகளை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 25 கோடிகளையும், கன்னடத்தில் 11 கோடிகளையும், கேரளாவில் 4 கோடிகளையும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் 7 கோடிகளை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jailer Release LIVE : வாரிசு துணிவு வசூலை முறியடிக்குமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படத்திற்கு பாராட்டுகள் பெருகி வரும் நிலையில் இந்த ஆண்டிம் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியை படம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியான துணிவு மற்றும் வாரிசு உள்ளிட்டப் படங்களின் முதல் நாள் வசூலை ஜெயிலர் திரைப்படம் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.