Rajini - Kamal : ரஜினி கொடுத்த சூப்பர் ஐடியா...ஒகே சொன்ன கமல்..42 வருடங்களுக்குப் பிறகு சிறப்பான சம்பவம்
கிட்டதட்ட 42 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக நடிகர் சங்கம் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது
![Rajini - Kamal : ரஜினி கொடுத்த சூப்பர் ஐடியா...ஒகே சொன்ன கமல்..42 வருடங்களுக்குப் பிறகு சிறப்பான சம்பவம் Actor rajini and Kamalhaasan to act together in drama conducted by nadigar sangam Rajini - Kamal : ரஜினி கொடுத்த சூப்பர் ஐடியா...ஒகே சொன்ன கமல்..42 வருடங்களுக்குப் பிறகு சிறப்பான சம்பவம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/08/9d82319c266b5378dd9de5b0d483a20d1725798120349572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஜினி கமல்
ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடித்த படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கிளாசிக் படங்களாக கொண்டாடப் படுகின்றன. தமிழ், இந்தி என இருவரும் இணைந்து 16 படங்கள் நடித்துள்ளார்கள். கடைசியாக கே பாலச்சந்தர் இயக்கிய அக்னி சாட்சி படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். தற்போது இருவருமே தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்களாக இருக்கும் நிலையில் இருவரையுமே திரையில் சேர்ந்து பார்ப்பது என்பது அசாத்தியமான ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் தற்போது கிட்டதட்ட 42 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக நடிகர் சங்கம் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க பொதுக்குழு
நடிகர் நாசர் தலைமையிலான நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் சைக்கிளில் வந்து கலந்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பிற நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். ஹேமா கமிட்டி , நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி நடிகர் சங்கத்திற்கு நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி கொடுத்தது பற்றி பேசினார். மேலும் இந்த கட்டிடம் கட்டி முடிப்பதற்கு வங்கியில் வாங்கப்பட்டுள்ள கடனை அடைக்க சங்கத்தின் சார்பாக கலை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதாக கார்த்தி தெரிவித்தார்.
நடிகர்கள் ரஜினி, கமல் சேர்ந்து நாடகத்தில் நடிப்பதாக உறுதி அளித்துள்ளனர் – நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி #karthi #rajini #Kamal pic.twitter.com/eeCi3YSDbW
— ABP Nadu (@abpnadu) September 8, 2024
இந்த கலை நிகழ்ச்சின் ஒரு பகுதியா மேடை நாடகம் ஒன்று ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இந்த நாடகத்தில் நடிகர் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை கார்த்தி இன்று உறுதிபடுத்தினார். " இது ரஜினி சார் கொடுத்த ஐடியா தான். நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்றை சேர்ந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இது பற்றி நாங்களே ரொம்ப உற்சாகமாக இருக்கிறோம். தற்போது கமல் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் திரும்பி வந்த உடனே இது குறித்த வேலைகளை தொடங்கிவிடுவோம்" என்று கார்த்தி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த தகவல் ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இருதரப்பினரையும் உற்சாகப் படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Vinayakan : ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது... போதையில் காவலர்களுடன் வாக்குவாதம்
MALAYSIA VASUDEVAN : ஏ.ஐ மூலம் திரும்பிய மலேசியா வாசுதேவன்... வெளியானது வேட்டையன் மனசிலாயோ பாடல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)