MALAYSIA VASUDEVAN : ஏ.ஐ மூலம் திரும்பிய மலேசியா வாசுதேவன்... வெளியானது வேட்டையன் மனசிலாயோ பாடல்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலில் மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவன் குரல் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது

வேட்டையன்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , துஷாரா விஜயன் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் உள்ளிட்ட்வர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவுக்கு வந்தது. சென்னை, திருவனந்தபுரம், திருநெல்வேலி, ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட ஊர்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பேட்ட , தர்பார் , ஜெயிலர் ஆகிய படங்களைத் தொடர்ந்து வேட்டையன் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது வேட்டையன் படத்தின் முதல் பாடல் மனசிலாயோ பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இப்பாடல் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது
ஏ.ஐ மூலம் திரும்பிவந்த எஸ்.பி.பி
சமீப காலங்களில் மறைந்த படகர்களின் குரல்களை ஏ.ஐ மூலம் திரைப்படங்களில் பயண்படுத்தி வருகிறார்கள். லால் சலாம் படத்தில் மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் குரலை உருவாக்கி இருந்தார் ஏ ஆர் ரஹ்மா. சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் மறைந்த பாடகி பவதாரினியின் குரல் பயண்படுத்தப் பட்டிருந்தது.
Bringing back the legendary MALAYSIA VASUDEVAN’s 🎤 voice for SUPERSTAR 🌟 after 27 years! #MANASILAAYO 🥁 from VETTAIYAN 🕶️ Full song releasing tomorrow at 5PM 🕔 #Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/xXq7i6eLYl
— Lyca Productions (@LycaProductions) September 8, 2024
பொதுவாக ரஜினி படங்கள் என்றாலே ரஜினியின் அறிமுக பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது வழக்கம் ரஜினி நடித்த தர்பார் படத்தில் எஸ்.பி.பி. கடைசியாக பாடி இருந்தார். தற்போது மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

