Actor Prashanth Interview: விஜய் எனக்கு போட்டியா? சிம்ரன் என்னோட LUCKY CHARM! - 'அந்தகன்' புரொமோஷனில் நடிகர் பிரஷாந்த்
Actor Prashanth Interview: விஜயும் நானும் ஒரு நாளும் நீ பெருசா இல்ல நான் பெருசா என நினைச்சது கிடையாது. சிம்ரன் என்னோட லக்கி சார்ம்.
தமிழ் சினிமாவின் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு வழங்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, பூவையார், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ABP நாடு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து இருந்தார் நடிகர் பிரஷாந்த். படத்தின் திரைக்கதை மேக்கிங் குறித்தும் படத்தின் காஸ்ட் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்படி நடிகை சிம்ரன் ஜோடியாக ஏழாவது முறையாக 'அந்தகன்' படத்தில் இணைந்து நடித்த அனுபவம் பற்றி பகிர்கையில் "கலாய்த்து கொள்வோம் என சொல்வதை காட்டிலும் எங்க இரண்டு பேருக்கும் இடையில் நல்ல ஒரு நட்பு இருக்கிறது. இரண்டு பேருமே புரொஃபஷனல் நடிகர்களாக இருப்பதால் எங்களின் நடிப்பை எப்படி மேம்படுத்த முடியும் என யோசிப்போம். இன்னொரு பக்கம் நண்பர்களாக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வோம். சிம்ரன் என்னைக்குமே எனக்கு லக்கி சார்ம். எங்க இரண்டு பேர் காம்பினேஷன்ல வந்த படங்கள் எல்லாமே பெரிய ஹிட் படங்களாக அமைந்தன.
சமீப காலமாக மிகவும் ட்ரெண்டாக இருக்கும் ஒரு பாடல் அதில் ஸ்க்ரீனில் பிரபுதேவா, விஜய்யை தாண்டி ஒரு ஹீரோ மீது மக்கள் கவனம் திரும்பியது. அது தான் விஜய்யின் 'தி கோட்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு பாடல். அது பற்றி நடிகர் பிரஷாந்த் பேசுகையில் "இது எல்லாத்துக்குமே காரணம் இயக்குநர் வெங்கட் பிரபு தான். நீங்க மூணு பேருமே பிரேமில் வருவீங்க, டான்ஸ் ஆடுவீங்க... அதை பார்த்து மக்கள் கொண்டாடுவாங்க அப்படின்னு சொன்னாரு. அவர் சொன்ன மாதிரியே மேஜிக் செய்துட்டாரு. அந்த சாங் மேக்கிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. ஆனால் அது ஆடும் போது இவ்வளவு பெரிய மேஜிக் ஏற்படுத்தும் என நினைக்கல. மக்கள் அதை கொண்டாடும் போது சந்தோஷமாக இருக்கிறது.
நான் விஜய் இரண்டு பேருமே ஒரே சமயத்தில் கேரியர் ஸ்டார்ட் பண்ணி இருந்தாலும் நீ பெருசா நான் பெருசா என என்னிக்குமே நெனச்சது கூட இல்ல. அந்த நாளில் இருந்தே அவர் என்னை செட்டில் வந்து மீட் பண்ணுவதும் நான் அவரை போய் மீட் பண்ணுவதும் உண்டு. இந்த படம் நடிப்பதற்கு முன்னாடியே நாங்க இரண்டு பேரும் மீட் பண்ணி பல விஷயங்களை ஷேர் பண்ணிப்போம். எங்களுக்குள்ள நல்ல ஒரு பாண்ட் இருந்தது. இந்த படம் எங்க நட்பை மேலும் அதிகப்படுத்தி விட்டது. விஜய் ஒரு நல்ல மனிதர். உண்மையான அன்பை வெளிப்படுத்த கூடியவர். எனக்காக அவர் அக்கறைப்படுகிறார். அதே போல அவருக்காக நான் இருக்கிறேன்” என்றார்.