HIT 3: நானியின் ஹிட் 3 படத்தை யாரும் பாக்காதீங்க.. படத்தின் இயக்குனரே ஏன் அப்படி சொன்னார்?
ஹிட் 3 படத்தின் இயக்குனர் சைலேஷ் இந்த படத்தை 18 வயதுக்கு கீழே இருக்கும் யாரும் படத்தை பார்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நானி. இவரது நடிப்பில் நாளை மறுநாள் உழைப்பாளர் தின கொண்டாட்டமாக ஹிட் 3 படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இவர் இயக்கிய ஹிட் 1, ஹிட் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாக ஹிட் 3 படம் ரிலீசாகிறது.
என் படத்தை பாக்காதீங்க:
People under the age of 18, stay away from #HIT3. It is going to be very violent.#HIT3 in cinemas from May 1st ❤🔥
— 𝐕𝐚𝐦𝐬𝐢𝐒𝐡𝐞𝐤𝐚𝐫 (@UrsVamsiShekar) April 28, 2025
Book your tickets now!
🎟️ https://t.co/dOHqDl5akO pic.twitter.com/RfVrhCBcMn
இந்த படம் குறித்து பேசிய படத்தின் இயக்குனர் சைலேஷ் கோலானு, அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும். இந்த படத்தில் வன்முறை அதிகம் ஆகும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த படத்தை பார்க்க ஏற்றவர்கள் கிடையாது. அதனால், 18 வயதுக்கு கீழே இருப்பவர்கள் இந்த படத்தை பார்க்காமல் விலகியிருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த படத்தில் நானி காவல்துறை அதிகாரியாக உள்ளார். ஸ்ரீநிதி, சூர்யா சீனிவாஸ், ராவ் ரமேஷ், பிரம்மாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஹிட் சீரிஸ் படமானது கொலை சம்பவங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் பற்றிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 2020ம் ஆண்டு முதன்முதலில் ஹிட் படம் வெளியானது. அதன்பின்பு 2022ம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் ரிலீசானது. 3வது பாகம் தற்போது ரிலீசாகிறது.
ஹிட் 3:
இப்போது வெளியாக உள்ள ஹிட் 3 படத்தை நானியும், பிரசாந்தி திபிர்னேனியும் இணைந்து தயாரித்துள்ளனர். சானு ஜான் வர்க்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை, கார்த்திகா சீனிவாஸ் எடிட்டிங் செய்துள்ளார். மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார். 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் காஷ்மீர், ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
தமிழிலும் ரிலீஸ்:
நேரடி தெலுங்கு படமான இந்த படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. ஹிட் படம் மூலமாக கடந்த 2020ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான சைலேஷ் தொடர்ந்து ஹிட் சீரிஸ் படங்களையே இயக்கி வருகிறார். இடையில் வெங்கடேஷ் நாயகனாக நடித்த சைந்தவ் படத்தை இயக்கியிருந்தார்.





















