Watch Video: காலமெல்லாம் காதல் வாழ்க... கிட்டார் இசைத்து தேவா பாடல் பாடி லைக்ஸ் அள்ளும் நகுல்!
நடிகர் நகுல் -ஸ்ருதி தம்பதி தொடர்ந்து Couple Goals செய்து இணைய உலகின் ஃபேவரைட் தம்பதிகளில் ஒருவராக வலம் வந்தபடி உள்ளனர்.
பாய்ஸ் திரைப்படத்தில் தன் 19 வயதில் துறுதுறு இளைஞனாக அறிமுகமாகி நடிகர், பாடகர், ரியாலிட்டி ஷோ நடுவர் என வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கவனமீர்த்து வருபவர் நடிகர் நகுல்.
நடிகை தேவயானியின் தம்பியான நடிகர் நகுல், காதலில் விழுந்தேன், மாசிலா மணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனமீர்த்தார்.
தற்போது என்னதான் முன்பு போல் திரைப்படங்களில் ஆக்டிவ்வாக இல்லாவிட்டாலும், நெட்டிசன்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக வலம் வருகிறார் நகுல்.
தனது காதல் மனைவி ஸ்ருதி பாஸ்கரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நகுலுக்கு, அகிரா, அமோர் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நகுலுக்கு இணையாக இன்ஸ்டாகிராமில் செலிப்ரிட்டியாக வலம் வரும் அவரது மனைவி ஸ்ருதி, தொடர்ந்து குழந்தைகளை பார்த்துக் கொள்வது, உணவு ரெசிப்பி வீடியோ, குடும்ப வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவிட்டு நெட்டிசன்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.
குறிப்பாக நகுல் -ஸ்ருதி தம்பதி தொடர்ந்து கப்பிள் கோல்ஸ் செய்து இணைய உலகின் ஃபேவரைட் தம்பதிகளில் ஒருவராக வலம் வந்தபடி உள்ளனர். இந்நிலையில் தங்கள் 8ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி, தமிழ் சினிமாவின் பிரபல காதல் பாடல் பாடி வீடியோ பகிர்ந்துள்ளனர்.
View this post on Instagram
அஜித் - தேவயானி நடித்த காதல் கோட்டை படத்தில் தேவா இசையில் இடம்பெற்ற “காலமெல்லாம் காதல் வாழ்க” பாடலை நகுல் - ஸ்ருதி தம்பதி இணைந்து தங்கள் ஸ்டைலில் பாடி லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.
மேலும், நீங்கள் முதன்முதலில் சந்தித்து தெரிந்துகொள்ளும் நபர்கள் இருக்கிறார்கள், ஆனால் சிலரை முதல் முறையாக நீங்கள் சந்திக்கும்போது ஏற்கெனவே அவர்களைத் தெரிந்து கொண்ட உணர்வு இருக்கும்! நான் உன்னை முதன்முதலில் சந்தித்தபோது அப்படி தான் உணர்ந்தேன், என் வாழ்நாள் முழுவதும் என் உடன் கண்விழித்து நாளைத் தொடங்கும் நபர்ரை சந்தித்ததைக் கண்டுபிடித்தேன்.
உன்னில் நான் அன்பைக் கண்டேன், என்னால் உண்மையில் விளக்க முடியாத அன்பை நான் கண்டேன், நம் அமைதியான தருணங்களில் மட்டுமே அதை உணர முடியும்” என காதலுடன் பதிவிட்டுள்ளார்.
நகுல் - ஸ்ருதியின் இந்த அழகிய திருமண நாள் பர்ஃபாமன்ஸ் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.