Nagarjuna: விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகார்ஜூனா.. தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி நபருடன் சந்திப்பு!
Nagarjuna Airport Incident: பாதுகாவலர்களால் விமான நிலையத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தள்ளிவிடப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அந்த நபரை நடிகர் நாகர்ஜூனா நேரில் சந்தித்துள்ளார்.
குபேரா
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நாகார்ஜூனா (Nagarjuna). தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிகர் தனுஷூடன் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக விமான நிலையம் சென்றார் நாகார்ஜூனா. அப்போது அவருடன் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால் நாகார்ஜூனாவின் பாதுகாப்புக்காக சென்ற நபர், அந்த ரசிகரைப்பிடித்து தள்ளி விட்டார்.
The bigger you are the more humble you should be, but here the arrogance is at its peak 😬 #shameless#mobilephotography #nagarjuna pic.twitter.com/qKk9TjmG0E
— Gulshan Katiyar (@GulshanKatiyar) June 24, 2024
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நடந்த சம்பவத்தை கண்டு கொள்ளாமல் சென்ற நாகார்ஜூனாவுக்கு கடுமையான கண்டனங்களை நெட்டிசன்கள் பதிவு செய்தனர். பொது இடங்களில் செல்ஃபி கேட்டு வரும் ரசிகர்களைக் கையாள பல வழிகள் இருக்கும் நிலையில், இப்படியா முரட்டுத்தனமாக நடப்பார்கள் என சிலர் கேள்வி எழுப்பினர்.
மன்னிப்பு கேட்ட நாகர்ஜூனா
Avare push pannathe Nagarjuna paakave ille. Athukku pottu adi adi nu adichittu irunthanunge. Nagarjuna pinnadi oru actor vantharu, avaru yen paakale nu yaarum kekale... pic.twitter.com/TUtAi7dGxR
— ஜமுனா வேலு (@jamunah_velu) June 26, 2024
இந்தப் பிரச்சனை சமூக வலைதளத்தில் பெரிதாகியதைத் தொடர்ந்து இந்த வீடியோவை பகிர்ந்து நாகார்ஜூனா தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “இது என் கவனத்துக்கு வந்தது... இது நடந்திருக்கக் கூடாது! நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன்” எனத் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது நாகர்ஜூனா அந்த நபரை அதே விமான நிலையத்தில் நேரில் சென்று கட்டிப்பிடித்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நாகர்ஜூனாவை விமர்சித்த பலரை அமைதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மேலும் பிடிக்க : Kalki 2898 AD : 1 மில்லியனை கடந்த முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்... ஆர்.ஆர்.ஆர், பாகுபலியின் சாதனையை முறியடிக்குமா கல்கி 2898 AD?