Manikandan: அதிர்ஷ்டம் எப்படி வேலை செய்யும் தெரியுமா? : மணிகண்டன் சொல்வதை கேளுங்க!
ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கிய மணிகண்டன் பீட்சா 2 படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் படம் மூலம் நடிக்க தொடங்கினார்.
நான் கடவுள் கருணை, அதிர்ஷ்டம், விதி என எந்த கோட்பாட்டையும் நம்புவன் இல்லை என நேர்காணல் ஒன்றில் நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கிய மணிகண்டன் பீட்சா 2 படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார். தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் படம் மூலம் நடிக்க தொடங்கிய அவருக்கு காதலும் கடந்து போகும் படம் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, பாவக்கதைகள், ஏலே, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
ஜெய் பீம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான மணிகண்டன், சில நேரங்களில் சில மனிதர்கள், குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதேசமயம் விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் நரை எழுத்தும் சுயசரிதம் என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படி பன்முக திறமை கொண்ட மணிகண்டன் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.
View this post on Instagram
ஒரு நேர்காணல் ஒன்றில் தன் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி அவர் பேசியுள்ளார். அதாவது, “நான் கடவுள் கருணை, அதிர்ஷ்டம், விதி என எந்த கோட்பாட்டையும் நம்புவன் இல்லை. ஆனால் அதையெல்லாம் என் வாழ்க்கையில் செயல்படுகிறது என்பதை புரிந்துக் கொண்டேன். சினிமாவில் ஒரு 10 ஆயிரம் பேர் இருப்பார்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.
திரைத்துறையில் யாராவது நம்மளை பார்க்குறாங்க என வேலை செய்வதை காட்டிலும், மிகவும் நேர்மையாக வேலை செய்பவனை உற்று கவனிக்கிறார்கள். செட்டுக்குள் நாம் பெறும் நல்ல பெயர் வெளியே சென்று பரப்பப்படுகிறது. அப்படி சொல்லும்போது அங்கு நமக்கு ஒரு வாய்ப்பானது தயாராகி கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பானது கிடைக்க வேண்டும் என்றால் இந்த வார்த்தை பரவல் என்பது இருக்க வேண்டும். அதன்பின்னால் இப்படி விஷயம் செயல்பட்டு கொண்டிருக்கிறது” என மணிகண்டன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: G Marimuthu: அதிர்ச்சியளித்த எதிர்நீச்சல் குணசேகரனின் இழப்பு.. மாரிமுத்துவின் குடும்பம் எப்படி இருக்கிறது?