Kamalhaasan Health: நாயகன் மீண்டும் வரான்.. டிஸ்சார்ஜ் ஆனார் கமல்.. டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ் இதுதான்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்வுகள் என பிசியாக ஷெட்யூலில் இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்வுகள் என பிசியாக ஷெட்யூலில் இருக்கிறார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் அவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் மும்முரமாக நடித்து வரும் அவர் அதற்கடுத்தப் படத்தில் மணிரத்னத்துடன், இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்ற கமல், அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
View this post on Instagram
பின்னர் பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்திருந்தார். இதன் புகைப்படத்தை நேற்று அவர் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் கமல் பகிர்ந்திருந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் மதியம் சென்னை திரும்பிய அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கமல் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி அனுமதிக்கப்பட்டார்.
View this post on Instagram
இதற்கிடையில் ராமச்சந்திரா மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கமல் லேசான காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் இன்று வீடு திரும்பியுள்ளார். அவரை இன்று ஒருநாள் முழு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.