மேலும் அறிய

Joju George : அசரவைக்கும் ஜோஜு ஜார்ஜ்... ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய ஆண்டனி பட ட்ரைலர்!

ஜோஷியின் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதை மற்றும் மனதை கவரும் வகையில் உருவாக்கி இருக்கும் 'ஆன்டனி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

பொரிஞ்சு மரியம் ஜோஸ் படத்தின் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து 'ஆண்டனி' படத்தை உருவாக்கி உள்ளனர்.  இந்த படத்தின் அதிரடி டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அனைவரிடத்திலும் ட்ரெய்லர் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இப்படத்தை ஐன்ஸ்டின் சாக் பால் தயாரிக்க, ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் சுஷில்குமார் அகர்வால், ரஜத் அகர்வால், நிதின் குமார், கோகுல் வர்மா மற்றும் கிருஷ்ணராஜ் ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ராஜேஷ் வர்மா இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். 'ஆண்டனி' படம் மனிதர்களின் உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து, குடும்பப் பிணைப்புகளைத் தாண்டி ஒரு அழுத்தமான கதையை சொல்கிறது.

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆன்டனி' படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் பிலிம்கோ மோஷன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இரத்த உறவுகளை விட ஆழமான தொடர்பைக் கொண்டிருக்கும் உறவுகளை பற்றி படம் பேசுகிறது.  முன்னணி நடிகர்கள் தவிர 'ஆண்டனி' திரைப்படத்தில் விஜயராகவன், ஆஷா சரத், ஜினு ஜோசப், ஹரிபிரசாந்த், அப்பானி சரத், பினு பப்பு, சுதிர் கரமனா, ஜூவல் மேரி, ஜிஜு ஜான், பத்மராஜ் ரதீஷ், ஆர்.ஜே.ஷான், ராஜேஷ் சர்மா, சுனில் குமார், நிர்மல் பாலாழி, கராத்தே கார்த்தி, சிஜோய் வர்கீஸ், டைனி டாம் மற்றும் மனோஹரியம்மா  உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்கள் உள்ளனர். கல்யாணி பிரியதர்ஷன் இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரெனதிவ்வின் வசீகரிக்கும் ஒளிப்பதிவுடன், ஜேக்ஸ் பிஜோயின் மயக்கும் இசையில், ஜோஷியின் இயக்கத்தில் ஆண்டனி படம் நேர்த்தியான மற்றும் தனித்துவமான பாணியை கொண்டுள்ளது.  ட்ரீம் பிக் ஃபிலிம்ஸ் படத்தின் விநியோகம் செய்கிறது, மேலும் சிபி ஜோஸ் சாலிசேரி தலைமை இணை இயக்குநராக பணியாற்றுகிறார், ராஜசேகர் ஆக்சன் இயக்குநராக பணியாற்றி உள்ளார். 'ஆண்டனி' திரைப்படத்தில் எடிட்டர் ஷியாம் சசிதரன் மற்றும் ஆர்.ஜே.ஷான் போன்ற திறமையான குழுவினரும் இடம்பெற்றுள்ளனர். 

திலீப் நாத்தின் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பிரவீன் வர்மா ஆடை வடிவமைப்பாளராகவும், தீபக் பரமேஸ்வரன் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்கொள்கிறார். மேலும் ரோனெக்ஸ் சேவியர் மேக்கப், அனூப் பி சாக்கோவின் ஸ்டில்களும், விஷ்ணு கோவிந்தின் சிறந்த ஒலிப்பதிவும் மற்றும் படத்தின் பிஆர்ஓவாக சபரி பணியாற்றுகிறார். படத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல்தொடர்புகளை சங்கீதா ஜனச்சந்திரன் மற்றும் கேரளாவில் அப்ஸ்குராவால் கையாளப்படுகிறது. வரும் டிசம்பர் 1 முதல் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget