மேலும் அறிய

‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

‘டிசி’ முதல் நாளில் ரூ.5.70 கோடி வசூல்; லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கும் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிப்பில் வெளியாகியுள்ள ‘டிசி’ திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் கவனம் ஈர்த்துள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், இந்தியாவில் முதல் நாளில் ரூ.4.10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ரூ.5.70 கோடி வசூலை ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்ப் பதிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘டிசி’ படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் கதாபாத்திரத்திலும், வாமிகா கபி சந்திரா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்

படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் ஆரம்பகட்ட விமர்சனங்களில் லோகேஷ் கனகராஜின் நடிப்பு முக்கியமாக பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது நடிப்பு இயல்பாகவும், கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் அருண் மாதேஸ்வரனின் மேக்கிங் ஆகியவையும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

பாராட்டுக்களை அள்ளும் லோகேஷ் கனகராஜ் 

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என முன்னணி நடிகர்களை வைத்து பெரிய அளவிலான திரைப்படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.

இந்நிலையில், இயக்குநராக வெற்றி பெற்ற ஒருவர் திடீரென கதாநாயகனாக களமிறங்குவதாக அறிவித்தபோது, அவர்மீதும் அவரது நடிப்பின் மீதும் பல விமர்சனங்கள் எழுந்தன. நடிப்பில் லோகேஷால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் இருந்தது.

ஆனால் ‘டிசி’ வெளியான பிறகு அந்த சந்தேகங்களுக்கு அவரது நடிப்பு பதில் அளித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தேவதாஸ் கதாபாத்திரத்தில் அவர் காட்டிய இயல்பான நடிப்பு படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. இயக்குநராக ஏற்கெனவே உயரத்தை தொட்ட லோகேஷ், தற்போது நடிகராகவும் தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருப்பது ‘டிசி’ படத்தின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ஜெயிலர் 2 படத்திற்கு முன் ரஜினி காலில் விஜய் விழும் வீடியோ: முருகன் சினிமாஸ் மன்னிப்பு
ஜெயிலர் 2 படத்திற்கு முன் ரஜினி காலில் விஜய் விழும் வீடியோ: முருகன் சினிமாஸ் மன்னிப்பு
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
துபாயில் வெளியிடப்பட்ட 'தி ரீல் ஃபைல்ஸ்' சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் 
துபாயில் வெளியிடப்பட்ட 'தி ரீல் ஃபைல்ஸ்' சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget