Actor Jayam ravi: கார்த்தி மாதிரி நண்பர் கிடைப்பது கஷ்டம்: ஜெயம் ரவிக்கு அப்படி என்ன செய்தார்?
கார்த்தி போன்ற நண்பன் கிடைப்பது உண்மையில் கடினம் என்று நடிகர் ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
கார்த்தி போன்ற நண்பன் கிடைப்பது உண்மையில் கடினம் என்று நடிகர் ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
ஜெயம் ரவி பேசும் போது, “ நல்ல ஷாட்டுக்கு கைத்தட்டக்கூடிய மக்கள் நம் தமிழ் மக்கள். எனக்கு குதிரை ஓட்டம் பெரிதாக தெரியாது. பயமும் உணடு கார்த்திதான் மச்சி வா பார்த்துக்கலாம். நான் சொல்லி தருகிறேன் என்று அழைத்து செல்வார். கார்த்தி போன்ற நண்பன் கிடைப்பது உண்மையில் கடினம். இதில் நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறோம். பொன்னியின் செல்வன் படம் உங்களுக்காக எடுத்து இருக்கிறோம்” என்று பேசினார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்டது.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
View this post on Instagram
2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க 3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.