Jayam Ravi: ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை... பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட படக்குழு
இன்று நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய இரு படங்களில் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன
ஜெயம் ரவி
ரொமான்ஸ் , காமெடி , ஆக்ஷன் என எல்லா வெரைட்டியான கதைகளிலும் நடிக்கக் கூடியவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக இறைவன் மற்றும் சைரன் ஆகிய இரு படங்கள் வெளியாகின. இரு படங்களும் பெரியளவில் கவனத்தை ஈர்க்க தவறின. தற்போது பிரதர், காதலிக்க நேரமில்லை , ஜீனி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையில் தனது மனைவி ஆர்த்தி ரவியுடனான திருமண உறவை முடித்துக் கொள்ள இருப்பதாக அவர் அறிவித்தார். இன்று ஜெயம் ரவி தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பிரதர்
Get ready for a Musical Extravaganza🎷🎺🥁 @actor_jayamravi's #Brother GRAND AUDIO & TEASER LAUNCH on Sep 21st !
— Screen Scene (@Screensceneoffl) September 10, 2024
A @Jharrisjayaraj Vibe 🎸https://t.co/VJ3KtiPxIO#HappyBirthdayJayamRavi #HBDJayamravi #HBDJR@rajeshmdirector @priyankaamohan pic.twitter.com/5V4cgK03ew
தற்போது ஜெயம் ரவி எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரின் சீன் மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு நடைபெற இருப்பதாக இன்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
காதலிக்க நேரமில்லை
#HBD_Jayamravi, here’s a special birthday treat from team “kadhalikka Neramillai” #HBDJayamRavi#காதலிக்க_நேரமில்லை#KadhalikkaNeramillai @actor_jayamravi@MenenNithya@astrokiru @arrahman@tseriessouth@iYogiBabu @VinayRai1809 @LalDirector @highonkokken @TJBhanuOfficial… pic.twitter.com/DSvmkmxs23
— Red Giant Movies (@RedGiantMovies_) September 10, 2024
அடுத்தபடியாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் காதலிக்க நேரமில்லை. நித்யா மேனன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இபப்டத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.