Jayam ravi : இனிமேல் சோலோதான்... இன்ஸ்டாகிராமில் ஒன்று விடாமல் குடும்ப புகைப்படங்களை டிலீட் செய்த ஜெயம் ரவி
தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி
ஜெயம் ரவி
சரியாக தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பாக தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். இருதரப்பினரின் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்திருந்த நிலையில் ஆர்த்தி அதற்கு மாறாக இந்த விவாகரத்தில் ஜெயம் ரவி தன்னை கலந்தாலோசிக்கவில்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கெனிஷா என்கிற பாடகியுடன் ஜெயம் ரவி காதல் உறவில் இருப்பது தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என வதந்திகள் பரவின. இதுகுறித்து ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். தன் தனிப்பட்ட பிரச்சனைகளில் யாரையும் சேர்த்து பேச வேண்டாம் .வாழு வாழவிடு என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
எனக்கு மூச்சு முட்டியது
தனது விவாகரத்து குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் " ஆர்த்தியிடம் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு மூச்சு முட்டியது. வீட்டை விட்டு வெளியேறினேன். இப்போது என்னிடம் ஒரு காரை தவிர எதுவுமே இல்லை' என தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் குடும்ப புகைப்படங்களை நீக்கினார்
ஜெயம் ரவியின் இன்ஸ்டா கணக்கை தொடக்க காலத்தில் இருந்தே அவரது மனைவி ஆர்த்தியே கையாண்டுள்ளார். இருவருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சனைகளுக்குப் பின் தனது இன்ஸ்டா கணக்கை ஜெயம் ரவி கேட்டும் ஆர்த்தி அதை மறுத்துள்ளார். தனது படங்களின் ப்ரோமோஷன்களுக்கு கூட ஜெயம் ரவி தனது இன்ஸ்டா கணக்கை அனுகமுடியாத நிலை ஏற்பட்டது. விவாகரத்து அறிவித்த பின் ஜெயம் ரவி மெட்ட நிறுவனத்திடம் முறையாக கோரிக்கை வைத்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் கணக்கை திரும்பப் பெற்றார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் கைக்கு வந்ததும் முதல் வேலையாக தனது மனைவி ஆர்த்தியுடன் அவர் பதிவிட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் டிலீட் செய்துள்ளார். மேலும் சோலோவாக தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து புதிய நான் என்று கேப்ஷன் வைத்துள்ளார். இந்த விவாகரத்தில் தன்னைப் பற்றி எத்தனை வதந்திகள் வந்தாலும் விவாகரத்தில் ஜெயம் ரவி உறுதியாக இருக்கிறார்.
View this post on Instagram
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில் இரு தரப்பினரும் தங்கல் தரப்பு உண்மைகளை வெளிப்படையாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த விவாகரத்திற்கு பின் இருக்கும் உண்மையாக காரணத்தை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.