மேலும் அறிய

Jai Music Debut | இசையமைப்பாளர் ஆனார் நடிகர் ஜெய்.. வைரமுத்து வரிகளில் மிரட்டும் முதல் பாடல்!

ஜெய் இசையமைப்பாளராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திரைத்துறைக்கு வந்தாராம், எதிர்பாராத விதமாகத்தான் கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதன் பிறகு சென்னை 28 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலும் இவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. அதன் பிறகு சுப்ரமணியபுரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படமும் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது. பின்னர் எங்கேயும் எப்போதும், புகழ், பலூன் உள்ளிட்ட  25 படங்களில் நடித்துள்ளார்.  தற்போது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுசீந்திரன் இயக்கும் சிவ சிவா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஜெய். இந்த படத்தில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் படத்திற்கு இசையமைத்துள்ளார். 


Jai Music Debut | இசையமைப்பாளர் ஆனார் நடிகர் ஜெய்.. வைரமுத்து வரிகளில் மிரட்டும் முதல் பாடல்!
படத்தில் ‘காடமுட்ட’ என்ற பாடலுக்கு ஜெய் இசையமைத்துள்ளார். பாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுத, ஆகாஷ் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது வெளியாகி பலரை கவர்ந்துள்ளது. பாடலை கேட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் ஆர்யா, நடிகை நிக்கி கல்ராணி உள்ளிட்ட திரைத்துறையினர் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜெய் கூறுகையில் தனது 19 வருட கனவு நிறைவேறிவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஜெய் இசையமைப்பாளராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திரைத்துறைக்கு வந்தாராம், ஆனால் எதிர்பாராத விதமாக கதாநாயகன் ஆனதால் தனது நீண்ட நாள் கனவான இசையமைப்பாளர் அவதாரத்தை எடுக்க முடியாமல் போனது என்றும் தற்போது அது நிறைவேறிவிட்டது என்றும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். சிவ சிவா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜெய், 'சுப்ரமணியபுரம்' பட ஸ்டைலில் தாடி வைத்து, கைலியை மடித்து கட்டி, கிராமத்து இளைஞராக நடித்துள்ளார் . ஜெய் நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் , சிவ சிவா படத்தை மிகவும் நம்பிக்கையுடன் நடித்துக்கொடுத்துள்ளாராம்.  படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் ஆக்ஷனா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பால சரவணன், காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லெண்டி ஸ்டூரியோ ( Lendi Studio ) எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget