Gautham karthik: ‘வெத்தல போட்ட சோக்குல...’ தந்தையுடன் மோதி விளையாடிய கெளதம் கார்த்தி!
தந்தையுடன் குத்துச்சண்டை விளையாடும் வீடியோவை கெளதம் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

தந்தையுடன் குத்துச்சண்டை விளையாடும் வீடியோவை கெளதம் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'கடல்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தப்படம் படுதோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘வை ராஜா வை’ ‘ரங்கூன்’
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ‘மிஸ்டர். சந்திரமெளலி, ‘ தேவராட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
View this post on Instagram
இதில் ‘ரங்கூன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘மிஸ்டர். சந்திரமெளலி’ படத்தில் கெளதம் கார்த்தியும் அவரது அப்பாவுமான நடிகர் கார்த்தியும் இணைந்து நடித்தனர். எப்போதுமே நண்பர்கள் போல் பழகும் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கெளதம் கார்த்தி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் தந்தை கார்த்திக்குடன் கெளதம் கார்த்திக் விளையாட்டாக குத்துச்சண்டை விளையாண்டு கொண்டிருக்கிறார். அந்த வீடியோவின் பின்னணியில் அமரன் படத்தில் கார்த்திக் பாடிய ‘ வெத்தல போட்ட சோக்குல’ பாடல் இடம்பெற்று இருக்கிறது.
View this post on Instagram
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கெளதம் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக ‘பத்து தல’ ‘August 16, 1947’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கெளதம் கார்த்தி அண்மையில் தனது 33 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தில் இருந்து போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

