Dhruv Vikram: கல்லூரி மாணவிகள் கூட்டம்..! அசத்தலான பாடல்..! உள்ளத்தை உருக வைத்த துருவ் விக்ரம்..!
Dhruv Vikram : நடிகர் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம் தனியார் மகளிர் கல்லூரியில் பங்கேற்று பாட்டுப்பாடி அசத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தனது தந்தையை போலவே மிகவும் திறமையானவர். "ஆதித்ய வர்மா" திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஜூனியர் விக்ரம் என செல்லமாக அழைக்கப்படும் துருவ் விக்ரம் இன்றைய பெண்களின் ஹார்ட் த்ரோப். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகைகள் பட்டாளம் உள்ளது. ஒரு சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் துருவ் விக்ரம். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பகிரப்பட்டு வருகிறது.
அறிமுகமே சிறப்பு:
2019ம் ஆண்டு இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான "ஆதித்ய வர்மா" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் துருவ் விக்ரம். தெலுங்கில் "அர்ஜுன் ரெட்டி" என்ற பெயரில் வெளியான படத்தின் ரீ மேக் திரைப்படமான இது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
Today Dhruv Vikram attended Cultural function at MOP Vaishnav College 💖💖💖@chiyaan @chiyaanCVF @proyuvraaj @Kalaiazhagan15 @mugeshsharmaa pic.twitter.com/wlPL6uDS4f
— Suryanarayanan M (@sooriaruna) September 24, 2022
மாணவிகள் மத்தியில் துருவ்:
துருவ் சமீபத்தில் இசையமைப்பாளர் உஜ்வல் குப்தாவுடன் இணைந்து மனசே என்ற தலைப்பில் தனது முதல் மியூசிக் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் வெற்றியில் இருக்கும் துருவ் விக்ரம் சென்னை தனியார் பெண்கள் கல்லூரியின் கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவிகளின் ஆரவாரமான வரவேற்புடன் மேடையேறிய துருவ் தனது படத்தின் பிரபலமான பாடலான "ஏன் என்னை பிரிந்தாய் உயிரே..." என்ற சித் ஸ்ரீராம் பாடிய பாடலை பாடி மாணவிகளை உருக வைத்தார். அங்கு அவர் பாடிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது இன்றைய ட்ரெண்டிங் விடியோவாக உள்ளது. அதிகமாக பகிரப்பட்டு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.
View this post on Instagram