மேலும் அறிய

Dhanush in Tirupathi: யாருப்பா இது...? திருப்பதியில் சாமி தரிசனம்! மொட்டையுடன் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் தனுஷ்!

Dhanush in Tirupathi : உலக பிரசித்தி பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் தனுஷ். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அவரின் ரசிகர்களை ஆர்வத்தை அதிகரித்தது.  அதுமட்டுமில்லாமல் வெளியான ஒரே நாளில் ட்விட்டர் பக்கத்தில் 100k லைக்குகளை குவித்து பெரிய சாதனையை படைத்துள்ளது. இப்படம் இந்தாண்டின் இறுத்திக்குள் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.

திருப்பதியில் தனுஷ்

இந்நிலையில், உலக பிரசித்தி பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் தனுஷ். தனது இரண்டு மகன்களுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் வெளியே வந்த தனுஷை அவரது ரசிகர்களும், ஊடங்களும் வீடியோ பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

கேப்டன் மில்லர் படத்திற்காக தாடியும் மீசையுமாக இருக்கும் தனுஷ், கோயிலில் மொட்டை அடித்துள்ளார். மொட்டை அடித்ததால் தொப்பியையும் பெரிய ருத்ராட்ச மாலையையும் தனுஷ் கழுத்தில் காணமுடிகிறது. ஆன்மிக பயணம் சென்ற இவரது புது லுக்கை பார்த்த சிலர், “ இந்த எந்த படத்திற்கான லுக்காக இருக்கும்” என்றும் “ புஷ்பாவில் வரும் ஃபஹத் ஃபாசில் போல் உள்ளார்” என்றும் “தனது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக இப்படி செய்துள்ளார்” என்றும் அவரவர்களுக்கு தோன்றும் எண்ணங்களை கமெண்ட் செக்‌ஷனில் குவித்து வருகின்றனர்.

நிரம்பி வழியும் தனுஷின் கால்ஷீட்

கேப்டன் மில்லருக்கு பின்னர் தனுஷ், சேகர் கம்முலாவுடன் இணைந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாம். சிலர் இவர் மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைவார் என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D50 படத்தினை தனுஷ் தானே இயக்கி நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இது போதாதென்று இவரை பாலிவுட் சினிமாவில் அறிமுகம் செய்த ராஞ்சனா இயக்குநர் ஆனந்த எல்.ராயுடன் மீண்டும் இணைந்து நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

ஜூலை பேபி தனுஷ் 

இம்மாதத்தில் பிறந்த பிரபலங்களான ரன்வீர் சிங், எம்.எஸ்.தோனி, கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி ஆகியோரின் வரிசையில் ஜூலை மாதம் 28 ஆம் தேதியில் பிறந்தநாள் காண்கிறார் தனுஷ். இவரின் பிறந்தநாளையொட்டி பெரிய அப்டேட் நிச்சயமாக வெளியாகும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க : மாமன்னனாக 40 ஆண்டுகளுக்கு முன்பே நடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

Embed widget