செல்வராகவன், தனுஷ் கூட்டணி என்றாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும். அப்படித்தான் நானே வருவேன் படத்திற்குமான எதிர்பார்ப்பும் செல்வா ரசிகர்கள் மத்தியிலும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருக்கிறது.
ஏற்கெனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதமே தொடங்குவதாக இருந்தது. ஆனால், அப்போது திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. செல்வராகவன் பீஸ்ட் படப்பிடிப்புக்கு கால் ஷீட் கொடுத்திருந்ததால் நானே வருவேன் சூட்டிங் தள்ளிப்போனது. இந்நிலையில், அக்டோபர் 16ஆம் தேதி நானே வருவேன் படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க செல்வராகவன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அதன் படி முன்பு அறிவித்தபடி நானே வருவேன் படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களில் தனுஷ் செல்வா கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா அனைவரும் அறிந்ததே.
நானே வருவேன் என்ற படத்தின் பெயர் மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பெயரில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே பெயருடன் படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியான நிலையில், அடுத்தடுத்து சூட்டிங் பரபரப்பாக தொடங்கி, விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் படப்பிடிப்பு எந்த தடையுமின்றி தொடர்ந்து நடைபெறும் என கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தானு. இதோ அவரது ட்விட்டர் பதிவு
முன்னதாக நேற்று கலைப்புலி தானு வெளியிட்ட சூசக ட்விட்டர் அறிவிப்பு இதோ..
இதற்கிடையில் தானுவின் பதிவின் பின்னோட்டம் செய்யும் ரசிகர்களில் சிலர், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் அப்டேட் கேட்டு பதிவுகளை போட்டு வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
ட்விட்டர் பக்கத்தில் தொடர
யூடிபில் வீடியோக்களை காண