மக்களுக்கு டிமிக்கி; ஜெட் வேகத்துல கோவா சென்று கீர்த்திக்கு இம்பார்டன்ஸ் கொடுத்த தளபதி விஜய்!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பின் போது மக்களை அவர்களது இடத்திற்கு சென்று சந்திக்காத விஜய், இப்போது கீர்த்தி சுரேஷின் கல்யாணத்துக்காக கோவா சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது என்பது காலத்திற்கு ஏற்ப நடந்து கொண்டே தான் இருக்கிறது. எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பித்து, இப்போது விஜய் வரையில் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் அரசியலில் களமிறங்கி வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், கமல் ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யும் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
TVK கட்சி மாநாட்டில் நடந்த குளறுபடிகள்:
ஆனால், அதுலயே அவர் மீது விமர்சனம் எழுந்தது. மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு முறையான தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்து தரப்படவில்லை என்றும், முறையான பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் விமர்சனம் குவிந்தது. அதுமட்டுமின்றி மாநாட்டிற்கு வந்த தொண்டர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்கு கூட உடனடியாக இரங்கல் தெரிவிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை நேரில் சென்று கூட சென்று பார்க்காதவர் அரசியலுக்கு வந்துவிட்டதாக, சில அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தது.
2 நாளுக்கு பிறகே இரங்கல் அறிக்கை:
மாநாடு நடந்து முடிந்து 2 நாட்கள் கழித்து தொண்டருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு தமிழகத்தையே உலுக்கிய ஃபெஞ்சல் புயல் பாதிப்பின் போது மக்களை நேரடியாக சென்று களத்தில் சந்திக்கவில்லை என பேச்சுகள் அடிப்பட ஆரம்பித்ததும், அவரச அவசரமாக பாதிக்கப்பட்ட மக்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை கொடுத்து உதவினார்.
விஜய் வெளியில் வந்து மக்களை சந்திக்காததற்கு, கூட்டம் கூடி விடும் என்பது போல் TVK தரப்பில் கூறப்பட்ட நிலையில், இதற்க்கு மற்ற கட்சியினர் அரசியலுக்கு வருவது என வந்துவிட்டால் மக்களை களத்தில் சென்று சாதிப்பவர் தான் உண்மையான மக்கள் சேவகன். சொகுசாக உள்ளே இருந்து கொண்டு மக்களை வீட்டிற்கே வரவைத்து உதவுவதும், கூட்டம் கூடிவிடும் என சொல்லிக்கொண்டிருப்பதும் அரசியல்வாதிக்கு அழகல்ல என தெரிவித்தனர். விஜய்யின் இந்த செயல் அவருடைய கட்சியினர் மற்றும் ரசிகைகளையே கொஞ்சம் அப்செட் ஆகியதாகவே கூறப்பட்டது.
புத்தக வெளியீட்டில் பட்டாஸ் கிளப்பிய தளபதி பேச்சு:
இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தளபதி விஜய் அதிரடியாக தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தார். திமுக குறித்தும், திமுகவின் கூட்டணி கட்சிகள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு விஜய் கலந்து கொண்ட முதல் பொது மேடை இதுவாகும். எனவே இந்த மேடையை விஜய் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
கீர்த்திக்கு No சொல்லாத தளபதி விஜய்:
இந்த நிலையில் தான் தற்போது கோவாவில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமண நிகழ்ச்சியில் பட்டு வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டு மணமக்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தற்போது சமூக வலைதளங்களில் விவாததை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்திக்க தைரியம் இல்லாத, மற்றும் நேரம் இல்லாத விஜய், இப்போது கீர்த்தி சுரேஷின் கல்யாணத்துக்காக கோவா ஏன் சென்றார்?
TVK கட்சி-யில் கூட கீர்த்தியா?
மக்களை விட கீர்த்தி சுரேஷ் தான் உங்களுக்கு முக்கியமா? என்றெல்லாம் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர் நெட்டிசனால். இது ஒரு புறம் இருக்க விஜய் கட்சி ஆரம்பித்த போது த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷை மனதில் வைத்து தான் கட்சி TVK என பெயர் வைத்தார் சில சில மீம்ஸுகள் பறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மீம்ஸ் எல்லாத்தையும் தாண்டி, தளபதி இந்த திருமணத்தில் கலந்து கொள்ள காரணம் கீர்த்தி - விஜய் இடையே உள்ள நட்பு என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். விஜய் கீர்த்தி இருவரும் இதுவரை பைரவா மற்றும் சர்க்கார் என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.