Ananda Raj: “அடங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக” - இந்த வசனத்தின் பின்னணி தெரியுமா?
ஏழுமலை படத்தில் இடம்பெற்ற தன்னுடைய பிரபலமான வசனம் குறித்து நடிகர் ஆனந்தராஜ் மனம் திறந்துள்ளார்.
ஏழுமலை படத்தில் இடம்பெற்ற தன்னுடைய பிரபலமான வசனம் குறித்து நடிகர் ஆனந்தராஜ் பேசியதை பற்றி காணலாம்.
அடங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக:
கடந்த 2002 ஆம் ஆண்டு அர்ஜூன், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் “ஏழுமலை”. இந்த படத்தில் கஜாலா, மும்தாஜ், விஜயகுமார், ஆஷிஷ் வித்யார்த்தி, ஆனந்த ராஜ், சத்தியபிரியா, சார்லி, வையாபுரி என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். இந்த படத்தை நடிகர் அர்ஜூன் தான் இயக்கியிருந்தார். மணிசர்மா இசையமைத்த ஏழுமலை படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் அர்ஜூனுக்கு போடப்பட்ட பிஜிஎம் மியூசிக் மற்றும் ஆனந்தராஜ் பேசும் “அடங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக” என்ற வசனம் மிகப் பிரபலம்.
View this post on Instagram
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்தராஜிடம், ஏழுமலை படத்தில் “அடங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக” என்ற வசனத்தை நீங்கள் 19 முறை பேசியிப்பீர்கள் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஏழுமலை படத்தின் இயக்குநர் அர்ஜூன் தான். அவர் அடிப்படையில் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என அனைவருக்கும் தெரியும். அவருக்கு “அடங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக” வசனத்தின் ஆழம் புரியவில்லை. அப்போது அந்த படத்தின் எழுத்தாளர் தங்கம் என்பவருடன் பேசி பேசி படத்தில் சிறப்பான ஒரு வசனம் வைக்க வேண்டும் என முடிவு செய்து நிறைய யோசித்தோம்.
அதில் இந்த “அடங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக” என்ற வசனம் செட்டாகியது. அந்த படம் ரிலீஸான பிறகு நான் பெங்களூருவில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அப்போது அர்ஜூன் போன் பண்ணி, “சார் என்ன இப்படி இந்த வசனத்தை கொண்டாடுகிறார்கள்?” என கேட்டார். நான், “தகடு தகடு என்கிற வசனம் போல இதுவும் ஒரு மேஜிக் தான்” என சொன்னேன். எனக்கு ரொம்ப மரியாதை கொடுத்த வசனம் அது என ஆனந்தராஜ் தெரிவித்தார். மேலும் அப்போது எங்கு சென்றாலும் இந்த வசனத்தை பேச சொல்லி ரசிகர்கள் கேட்பார்கள். நானும் ரௌடி தான் படம் நடித்த வரை அந்த வசனம் பேசியிருப்பேன்.
மேலும் படிக்க: Manikandan: வாழ்க்கையை வெறுத்துப்போன நடிகர் மணிகண்டன்.. காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்!